பொது செய்தி

இந்தியா

நிச்சயமற்ற தன்மையை சந்திக்க வேண்டும்: 'நிடி ஆயோக்' துணை தலைவர் எச்சரிக்கை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:''கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மிகப் பெரிய அளவிலான நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும். ''இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், நிதி உதவி திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்யும்,'' என, 'நிடி ஆயோக்' துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.கொரோனா தொற்று பரவலை
நிச்சயமற்ற தன்மை,நிடி ஆயோக்,எச்சரிக்கை

புதுடில்லி:''கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மிகப் பெரிய அளவிலான நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும். ''இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், நிதி உதவி திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்யும்,'' என, 'நிடி ஆயோக்' துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அனைத்து தொழில்களும் முடங்கியதை அடுத்து, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதை சீர் செய்வதற்காக, 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், 27.1 லட்சம் கோடி ரூபாய் நிதித்திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தற்போது தீவிரம்அடைந்துள்ளது.

இது குறித்து, நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது:கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்க, மத்திய அரசு தீவிரமாக போராடி வருகிறது. பிரிட்டன் மற்றும் வேறு சில நாடுகளில் இருந்து பரவி வரும் வீரிய மிக்க புதிய வகை வைரசினால், தற்போதைய நிலைமை மிகவும் மோசம்அடைந்துள்ளது.தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள், கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்து வருவதால், மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைக்கு, பல மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, சேவை துறைகள் மீது நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் மீது மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தும்.எனவே, நுகர்வோர் மற்றும் முதலீடுகள் துறைகளில் மிக கடுமையான நிச்சயமற்ற தன்மை ஏற்படும். இதை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும்.இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், நிதி உதவி திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்யும். தேவையான நேரத்தில், நிதி உதவி திட்டங்கள் நிச்சயமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


'காற்றில் பரவும் கொரோனா!'

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: கொரோனா வைரஸ், காற்று வாயிலாக பரவக்கூடியது. எனவே, மூக்கை முழுவதுமாக மூடும் விதமாக முக கவசம் அணியவேண்டும். 'என் - 95' முக கவசங்கள் அணிவது தகுந்த பாதுகாப்பை அளிக்கும். துணி அல்லது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முக கவசங்கள் அணிவோர், இரண்டு முக கவசங்களை சேர்த்து அணிவது போதிய பாதுகாப்பை அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
19-ஏப்-202123:13:24 IST Report Abuse
PRAKASH.P Trying to set the stage for one more drama... Fin minister announce paper schemes dummy money,etc. Nothing will be given to people to manage their requirements. But MLA MP others just enjoy with public money for their safety and wealth. They plan what can be sold now to AAs. I think we should go back to state tax model and decline GST and states FMs between them to decide sharing the income or exp on common items instead waiting for this non working Central
Rate this:
Cancel
19-ஏப்-202112:45:39 IST Report Abuse
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி இன்னும் வரும் நாட்களில் மிகப்பெரிய உயிரிழப்பை பாரதம் சந்திக்க போகிறது. கரோனா பரவல் மிகவும் உக்கிரமாக இந்த இரண்டாம் அலையில் வீசி மக்கள் தொகை குறைந்தது 25% அழியப்போகிறது. அப்புறம் இருக்கவே இருக்கு பூகம்பம் மற்றும் மழை வெள்ளம்... பொறு பொறு அக்டோபர் - 2022 க்கு பிறகு சற்று தலை நிமிரும் இந்திய அரசு, அதற்குள் சீன யுத்தம் வராமல் இருக்கணும்.. தீவிரவாத தாக்குதல் செய்யாமல் இருக்கணும்... இன்னும் என்னென்ன சவால்களோ... ஐயோ பாவம் அப்பாவி பொது மக்கள். கோவிந்தா.... கோவிந்தா.... ராம் நாம் சத்யா ஹே.... கோஷம் தான் தெற்கிலும்.... வடக்கிலும்....ம்ம்ம்ம்.....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202111:52:22 IST Report Abuse
தல புராணம் பொருளாதார வளர்ச்சி 10 % மேலே இருக்கும்ன்னு போனவாரம் சொன்னவன் எல்லாம் நின்னு ரிவர்ஸ் கியரில் போறான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X