அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் 22ம் தேதி தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல்

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
சிறுபாக்கம் : நெய்வேலி தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல் தேதியை, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது;தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நெய்வேலி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை, நான், தொ.மு.ச., பேரவை அமைப்பு செயலர் வேலுச்சாமி, சபா ராஜேந்திரன் உட்பட கட்சி

சிறுபாக்கம் : நெய்வேலி தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல் தேதியை, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது;தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நெய்வேலி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை, நான், தொ.மு.ச., பேரவை அமைப்பு செயலர் வேலுச்சாமி, சபா ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகளுடன், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேட் அதிபர் மற்றும் இயக்குனர்களை சந்தித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 22ம் தேதி தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது.

சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து ஓட்டளிக்க வேண்டும். அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X