பொது செய்தி

இந்தியா

மூன்றாவது 'டோஸ்' தடுப்பூசி: நிபுணர்கள் விளக்கம்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது, 'பூஸ்டர் டோஸ்' தொற்று பரவலை திறம்பட கட்டுப்படுத்துமா என்பதை உறுதி செய்ய, மேலும் பல தரவுகள் தேவைப்படுகின்றன. 'இது தொடர்பான தற்போதைய பரிந்துரைகள் யூகத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப் படுகின்றன' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். நம் நாட்டில், கொரோனா தடுப்பூசிகளான, 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' ஆகியவை,
 மூன்றாவது 'டோஸ்', தடுப்பூசி, நிபுணர்கள், விளக்கம்

புதுடில்லி:'கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது, 'பூஸ்டர் டோஸ்' தொற்று பரவலை திறம்பட கட்டுப்படுத்துமா என்பதை உறுதி செய்ய, மேலும் பல தரவுகள் தேவைப்படுகின்றன. 'இது தொடர்பான தற்போதைய பரிந்துரைகள் யூகத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப் படுகின்றன' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

நம் நாட்டில், கொரோனா தடுப்பூசிகளான, 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' ஆகியவை, கடந்த ஜனவரி முதல் போடப்பட்டு வருகின்றன. இதுவரை, 12 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு, ஆறு முதல், எட்டு வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் போடப்படுகிறது.


'மாடர்னா'

'அமெரிக்காவைச் சேர்ந்த, 'பைஸர்' மற்றும் 'மாடர்னா' தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்களுக்கு, இந்த ஆண்டிலேயே, மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும். அதன் பின், ஆண்டுதோறும், ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, அந்நிறுவனங்கள் சமீபத்தில் தெரிவித்தன.

'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்கள், ஆறு மாதங்களுக்கு பின், மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என, அந்நிறுவனம் சமீபத்தில் பரிந்துரை செய்தது.

இதையடுத்து, சில தன்னார்வலர்களுக்கு மூன்றாவது டோஸ் செலுத்தி சோதனை செய்ய, டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சமீபத்தில் அனுமதி அளித்தது.

இது குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிலையதலைவர் சமீரன் பாண்டா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரண்டு டோஸ் தடுப்பூசிக்கு பிறகு, மூன்றாவது பூஸ்டர் டோஸ் அவசியம் என, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.கடந்த, 2019 டிசம்பரில் தான், கொரோனா என்ற வைரஸ் குறித்து நமக்கு தெரியவந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. முறையான தரவுகள்தடுப்பூசிகள் போடத் துவங்கி, ஐந்து மாதங்கள் கூட முழுமை அடைய வில்லை. அது குறித்த முறையான தரவுகள் நம்மிடம் இல்லை. அப்படியிருக்கையில், மூன்றாவது டோஸ் குறித்த பரிந்துரைகள், முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றன.

இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்ட பின், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு தீவிரமாக உருவாகும். அவை எத்தனை மாதங்கள் செயல்பாட்டில் இருக்கும். அதன் வீரியம் எப்போது குறையும் என்பது தெரிந்தால் மட்டுமே, மூன்றாவது டோஸ் எப்போது தேவைப்படும் என்ற முடிவுக்கு வர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

'மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது அல்லது ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து இப்போதைக்கு முடிவுக்கு வர முடியாது' என, மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.


உருமாறிய வைரஸா?

நம் நாட்டில், இரண்டாவது அலை வேகமெடுத்து இருப்பதற்கு, உருமாறிய கொரோனா பரவலே காரணம் என கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ், பி.1.617 என மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது, 'இரட்டை உருமாற்றம்' அடைந்த வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் பரவி வரும் கொரோனா வைரசில், இந்த இரட்டை உருமாற்றம் அடைந்த வைரஸ் வகை, 60 சதவீதமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதை மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
19-ஏப்-202106:58:35 IST Report Abuse
MANIAN K மக்களை அல்லல் பட வைத்து சம்பாதிக்கும் “அல்லலோ” பதி பார்மா கம்பெனிகள்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202100:20:42 IST Report Abuse
தல புராணம் அப்டீனா அவசர அவசரமா இவனுங்க மருந்துன்னு கண்டுபிடிச்சி போடுறது ஒண்ணுக்கும் பிரயோசனமில்லைன்னு அவங்களே ஒத்துக்குறாங்கன்னு புரியுது..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202100:19:14 IST Report Abuse
தல புராணம் அப்பத் தானே அவங்களுக்கு நிரந்தர வருமானம் வந்துகிட்டு இருக்கும்.. வைரசை பரவ விட்டது சீனாவா இல்லை மருந்து கம்பெனிகளான்னு யோசிக்க வைக்கும் வகையில் இந்த செய்தி இருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X