பொது செய்தி

தமிழ்நாடு

கடும் கட்டுப்பாடு! தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (25+ 38)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுதும், இரவு நேர ஊரடங்கு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டத்தை தடுக்க, அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகளும், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வேகமாக பரவுவதால், இந்நடவடிக்கைகளை தமிழக அரசு
கடும் கட்டுப்பாடு! தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுதும், இரவு நேர ஊரடங்கு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டத்தை தடுக்க, அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகளும், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வேகமாக பரவுவதால், இந்நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

தமிழகத்தில், தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி., சென்னையில் தன் வீட்டில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

* ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மேலும் சில செயல்பாடுகளுக்கு, நாளை அதிகாலை முதல், மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது

* மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது

* இரவு நேரங்களில், பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான, பொது மற்றும் தனியார் போக்குவரத்தும், அந்த நேரத்தில் அனுமதிக்கப்படாது

* மாநிலங்களுக்கு இடையிலான, பஸ் சேவைகளின் போது, முக கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்றவை தவறாமல் பின்பற்றப்படுவதை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்

* அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்

* அத்தியாவசிய பணிகளான, பால் வினியோகம், நாளிதழ்கள் வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள், இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்

* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் செயல்படும்

* தடையின்றி செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இரவு நேர ஊரடங்கின் போது செயல்படலாம். இந்நிறுவனங்களில், இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களில், இரவு காவல் பணிபுரிவோரும், அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருந்தால் தான் அனுமதிக்கப்படுவர்.


ஞாயிறு முழு ஊரடங்கு

*மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது. இதை கடைப்பிடிக்காதவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய பணிகளான, பால் வினியோகம், நாளிதழ்கள் வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள்,ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் மற்றும் அனைத்து சரக்கு வாகனங்கள், விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்


பிளஸ் 2 தேர்வு தள்ளிவைப்பு

*பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. தற்போது நடந்து வரும் செயல்முறைத் தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்
* கல்லுாரி மற்றும் பல்கலை ஆசிரியர்கள், தங்கள் வீட்டிலேயே, இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு, தனியார் கல்லுாரி மற்றும் பல்கலை தேர்வுகள், இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டும், பயிற்சி வழங்கலாம். கோடை கால முகாம்கள் நடத்த, தடை விதிக்கப்படுகிறது

* தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனை களுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து, கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படலாம். இதை சுகாதாரத் துறை ஆய்வு செய்து, அனுமதி வழங்கலாம். இந்த விடுதிகளில், பிற வாடிக்கையாளர்களை, தங்க வைக்கக் கூடாது.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


திருமணத்திற்குதடையில்லை!

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில், 100 பேருக்கு மிகாமல்; இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கவும், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்தவும், எந்த தடையும் இல்லை.

மக்களுக்கு வேண்டுகோள்!தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே நோயை கட்டுப்படுத்த வேண்டும்.மருத்துவமனைகளில், 'ஆக்சிஜன் சிலிண்டர்'களை, போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

தமிழகத்தில் அதை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு, உடனடியாக, தற்காலிக உரிமம் அளிக்க வேண்டும் என, முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

பொது மக்கள் முக கவசம் அணிவதை, தவறாமல் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பால் சுத்தம் செய்ய வேண்டும்.அவசிய தேவை இல்லாமல், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறிகள் தென் பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

அரசின் முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஓட்டல்களில் பார்சல்! முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை, 6:00 முதல், 10:00 மணி வரை; பகல், 12:00 முதல், மாலை, 3:00 மணி வரை; மாலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, 'பார்சல்' சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

‛ஸ்விகி, சொமட்டோ' போன்ற உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், அந்த நேரங்களில் மட்டும் செயல்படலாம். மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு, ஞாயிற்றுகிழமைகளில் அனுமதி இல்லை. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர், ஞாயிற்றுக் கிழமைகளிலும் தொடர்ந்து பணியாற்றலாம்.


பீச், சுற்றுலாவுக்கு தடை!

* ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற, அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் பயணியர் செல்ல, அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது

* அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு, அனைத்து நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத பணியாளர்கள், வீட்டிலிருந்தே பணிபுரிய, அந்தந்த நிறுவனங்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும்

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, டீக்கடைகள், உணவு விடுதிகள், காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட, அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள், ஒரே நேரத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், இரவு, 9:00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்

* மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பாபிஷேகம் நடத்த, தேதி நிர்ணயம் செய்து, முன்னேற்பாடுகள் செய்திருந்தால், பணியாளர்கள், நிர்வாகத்தினருடன், பொது மக்கள், 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்

* புதிதாக கும்பாபிஷேகம் நடத்துவதை, தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும். அத்தகைய நிகழ்வுகளுக்கு, தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்படாது.


சிறப்பு கண்காணிப்பு குழு!

திருமண மண்டபங்களில், திருமணத்தில் பங்கேற்போர், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை, நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறினால், மண்டப உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, திரையரங்கு, உணவகம், டீக்கடை போன்றவற்றில், வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, மாவட்டம்தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (25+ 38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murug - Chennai,இந்தியா
19-ஏப்-202120:40:58 IST Report Abuse
Murug ஆன்லைன் தேர்வுகளை நடத்த, சில பள்ளிகள் பெற்றோரிடமிருந்து கேள்வித்தாள் மற்றும் முன் வாரிய விடைத்தாள்களை நேரில் சேகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. பின்னர் மாணவர்கள் அந்தத் தாள்களில் தேர்வை எழுத வேண்டும், பெற்றோர்கள் மாலையில் தாளைச் சமர்ப்பிக்க வேண்டும். பூட்டுதலின் போது, பரீட்சைகளை நடத்த அரசு / சிபிஎஸ்இ வாரியம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது இதுதானா? இதை தான் ஆன்லைன் தேர்வு என்று அழைக்க வேண்டுமா?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஏப்-202120:28:52 IST Report Abuse
g.s,rajan ஊரடங்கு சும்மா கண் துடைப்புக்குத் தான் ஏற்கனவே பல பேருக்கு வேலை இல்லை பிசினஸ் இல்லை காத்து வாங்குது இந்த நேரத்தில் இன்னும் நெருக்கடி கொடுப்பது மேலும் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் ,உயிர் பற்றிய பயம் இன்னும் அதிகரிக்கும் ,இல்லாத தொழிலும் படுத்துவிடும் .இன்னும் பலர் தற்போது வேலையை இழப்பார்கள் .பல குடும்பங்கள வருமானம் இல்லாமல் திண்டாடி நடுத் தெருவுக்கு வரத்தான் போகிறது ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
19-ஏப்-202119:27:58 IST Report Abuse
bal என்னடா இது இரவு நேர கட்டுப்பாடு...எத்தனை பேர் நாட்டில் இரவில் உலாத்துகிறார்கள்....பொய் நாடகம் ஏன்..தொழில் பெட்டைகளில் காசு வாங்கி கொண்டு ஊரடங்கு போட பயப்படும் அரசியல் கொள்ளைகள்தான் இப்போது நாட்டில் உள்ளன...தேர்தலுக்கு காசு வாங்கிட்டாங்க கட்சிகள்..அதனால் ஊரடங்கு போட முடியாது என்று வெளிப்படையாக சொல்லுங்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X