அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:'கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப, தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதி உள்ளார்.உத்தரவுகடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதை அறிந்திருப்பீர்கள். ஏழு நாட்களில், பாதிக்கப்பட்டோர் மற்றும்
தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:'கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக மக்கள்தொகைக்கு ஏற்ப, தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதி உள்ளார்.


உத்தரவு

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதை அறிந்திருப்பீர்கள். ஏழு நாட்களில், பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துள்ளது.

அரசு தகவலின்படி, நேற்று முன்தினம் வரை, 61 ஆயிரத்து, 593 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், நிலைமை கையை மீறி போய் விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் தவிர்த்து, தடுப்பூசி போடுவது மருத்துவ பாதுகாப்பாகும்.அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை, மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. மத்திய அரசு வழிகாட்டுதல்படி, முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது.

அடுத்த கட்டமாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில், 46.70 லட்சம் பேர், தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில், 6.05 லட்சம் பேர் மட்டும், இரண்டாவது, 'டோஸ்' போட்டுள்ளனர்.தற்போது, தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், தடுப்பூசி போட செல்வோர், மருந்து இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

தமிழக அரசு ஏற்கனவே, 20 லட்சம் தடுப்பூசி வழங்கும்படி, மத்திய அரசிடம் கேட்டுள்ளது. மனித உயிர்களை காக்க, அனைவருக்கும் தடுப்பூசி என்பது, காலத்தின் தேவையாகிறது.உடனடியாக, தமிழகத்திற்கு தேவையான, 20 லட்சம், 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகளை, அனுப்பி வைக்கும்படி, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப, தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.


அனுமதி

மேலும், மருந்து கொள்முதலில், மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திராமல், மாநிலங்களே கொள்முதல் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்.

அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவை, விரைவாக எடுத்து, தற்போதைய கொரோனா பெருந்தொற்று சூழலில் இருந்து, தமிழகம் மீள உதவ வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.இக்கடிதத்தில், தி.மு.க.,- - எம்.பி.,க்கள் அனைவரும் கையெழுத்திட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambath kumar - pondicherry,இந்தியா
19-ஏப்-202122:47:59 IST Report Abuse
sambath kumar Asking permission to procure medicine to state govt. Y? For taking commision? FOOL. IDIOT. YOU NEVER CHANGE YOUR ATTITUDE. GO & LICK MINORITY ASS .
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
19-ஏப்-202115:26:10 IST Report Abuse
srinivasan Please go to primary health center in your place, one has to register, wait in queue, gets vaccination. No need to approach PM
Rate this:
Cancel
sharvintej - madurai,இந்தியா
19-ஏப்-202108:23:56 IST Report Abuse
sharvintej ஆக எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X