பொது செய்தி

தமிழ்நாடு

காயலான் கடைக்கு தயாராகுதோ வாகனங்கள்! கொரோனா பரவலால் ஏலம் விட தாமதம்

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
அவிநாசி:திருப்பூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி மது பாட்டில்களை எடுத்து வரும் வாகனங்களை, மதுவிலக்கு பிரிவு போலீசார், அவ்வப்போது கண்காணித்து, பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அரசுடமையாக்கப்படுகின்றன.அவிநாசி, மதுவிலக்கு பிரிவு அலுவலக வளாகத்தில், மாவட்ட அளவில் பறிமுதல் செய்யப்பட்ட கார், பைக் உட்பட ஏராளமான காஸ்ட்லி
 காயலான் கடைக்கு தயாராகுதோ வாகனங்கள்! கொரோனா பரவலால் ஏலம் விட தாமதம்

அவிநாசி:திருப்பூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி மது பாட்டில்களை எடுத்து வரும் வாகனங்களை, மதுவிலக்கு பிரிவு போலீசார், அவ்வப்போது கண்காணித்து, பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அரசுடமையாக்கப்படுகின்றன.அவிநாசி, மதுவிலக்கு பிரிவு அலுவலக வளாகத்தில், மாவட்ட அளவில் பறிமுதல் செய்யப்பட்ட கார், பைக் உட்பட ஏராளமான காஸ்ட்லி வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.வாகனத்துக்கான ஏலத் தொகையை, கோவையிலுள்ள அரசு பணிமனை உதவி பொறியாளர் நிர்ணயம் செய்வர். விலையை அடிப்படையாக வைத்து, முன்னுரிமை அடிப்படையில் வாகனத்தை பறிகொடுத்தவர்களே அந்த வாகனத்தை ஏலம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.அவர்கள் ஏலம் எடுக்க முன்வராவிட்டால், பொது ஏலம் விடப்படும். அந்த வகையில், 70 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பறிமுதல் வாகனங்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கடந்தாண்டு கொரோனா தொற்று பரவலால் வாகனங்கள் ஏலம் விடப்படவில்லை. இந்தாண்டும் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இத்தகைய வாகனங்களை ஏலம் எடுக்கும் சிலர் கூறுகையில், 'பறிமுதல் வாகனங்களுக்கு, சந்தை விலையை விட பாதியளவு விலை தான் கடந்தாண்டுகளில், குறைந்தபட்ச ஏல விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால், அந்தந்த வாகன உரிமையாளர் அல்லது பிறரோ வாகனங்களை ஏலம் எடுத்தனர்.ஆனால், தற்போது வாகனங்களுக்கு அதிகளவு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது; விலையை குறைத்து ஏலம் விட வேண்டும்.வாகனங்கள் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், வெயில், மழையில் நனைந்து, பழுதாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X