மருத்துவமனையில் தீ நான்கு பேர் பலி

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
ராய்ப்பூர்-சத்தீஸ்கரில், தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோயாளிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து, மற்ற வார்டுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,

ராய்ப்பூர்-சத்தீஸ்கரில், தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோயாளிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து, மற்ற வார்டுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். தீயில் சிக்கி, நான்கு கொரோனா நோயாளிகள் இறந்தனர். மின் கசிவால் தீ பிடித்ததாக தெரிகிறது. இந்த விபத்து பற்றி, உயர்மட்ட விசாரணைக்கு, ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X