சிதம்பரத்திற்கு பதவி கிடைக்குமா?

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021
Share
Advertisement
காங்., மூத்த தலைவரான சிதம்பரம், மஹாராஷ்டிராவிலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜூனில் முடிவடைகிறது. 'மஹாராஷ்டிராவிலிருந்து இவருக்கு மீண்டும், எம்.பி., பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை; அங்கு பல காங்கிரசார் எம்.பி.,யாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர், காங்., சீனியர் தலைவர்கள். 'சிதம்பரத்துக்கு, 75 வயதாகிறது. இனி அவருக்கு,
delhi ush, டில்லி உஷ், நிர்மலா, நிர்மலா சீதாராமன், பிரசாந்த் கிஷோர், பஞ்சாப், தமிழகம், பிரசாரம், நிதி அமைச்சர், சிதம்பரம், ப.சிதம்பரம்,

காங்., மூத்த தலைவரான சிதம்பரம், மஹாராஷ்டிராவிலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜூனில் முடிவடைகிறது. 'மஹாராஷ்டிராவிலிருந்து இவருக்கு மீண்டும், எம்.பி., பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை; அங்கு பல காங்கிரசார் எம்.பி.,யாக காத்திருக்கின்றனர்' என்கின்றனர், காங்., சீனியர் தலைவர்கள். 'சிதம்பரத்துக்கு, 75 வயதாகிறது. இனி அவருக்கு, எம்.பி., பதவி கிடைக்காது. அவருடைய அரசியலும் முடிந்து விட்டது. அதிருப்தி தலைவர்கள் பட்டியலில், அவரது பெயரும் உள்ளது' என, காங்கிரசார் பலரும் பேசி வருகின்றனர்.


நிர்மலாவின் வருத்தம்


தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும், 'தமிழகத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே' என்ற வருத்தத்துடன் உள்ளார். நிர்மலா, கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 'கர்நாடக எம்.பி., தமிழகத்தில் பிரசாரம் செய்வது சரி வராது. காவிரி பிரச்னை தொடர்பாக பேச வேண்டியிருக்கும். இதனால் கர்நாடகாவில் பிரச்னை வரலாம்' என, மேலிடம் கூறியது தான், அவர் பிரசாரம் செய்யாததற்கு காரணம்.


பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை


அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, ஆளும் காங்கிரசுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார் பிரசாந்த் கிஷோர். இதற்காக, இப்போதிருந்தே பல வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார். 'தற்போது பதவியில் உள்ள, 30 எம்.எல்.ஏ.,க்களுக்கு 'சீட்' கொடுக்கக் கூடாது' என, முதல்வர் அமரீந்தரிடம் கூறியுள்ளார் கிஷோர். இது, பஞ்சாப் காங்கிரசாரை கடுப்பாக்கியுள்ளது. 'போலீசார் அறிக்கையை வைத்து, இந்த ஆலோசனையை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அவரது வியூகத்தை செயல்படுத்தினால், காங்கிரசுக்கு தோல்வி உறுதி' என, கட்சி மேலிடத்திடம் கொந்தளிக்கின்றனர், பஞ்சாப் காங்., நிர்வாகிகள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X