சில வரி செய்திகள்

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
விமான நிறுவனங்கள் மீது வழக்குபுதுடில்லி: 'மஹாராஷ்டிராவில் இருந்து டில்லி வந்த, 'இண்டிகோ, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா' விமானங்களில், பயணியரிடம் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்று உள்ளதா என்பதை முறையாக ஆய்வு செய்யவில்லை' என, டில்லி அரசு புகார் கூறியது. இது தொடர்பாக, நான்கு விமான நிறுவனங்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பா.ஜ., பிரமுகர்

விமான நிறுவனங்கள் மீது வழக்கு

புதுடில்லி: 'மஹாராஷ்டிராவில் இருந்து டில்லி வந்த, 'இண்டிகோ, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா' விமானங்களில், பயணியரிடம் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்று உள்ளதா என்பதை முறையாக ஆய்வு செய்யவில்லை' என, டில்லி அரசு புகார் கூறியது. இது தொடர்பாக, நான்கு விமான நிறுவனங்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ., பிரமுகர் மர்மச்சாவு

சக்தா: மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில், பா.ஜ., உறுப்பினரான திலீப் கீர்த்தானியா, 31, அவரது வீட்டின் அருகே நேற்று காலை, உடல் முழுதும் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இந்த மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரிக்கும் நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தான், திலீப்பை கொலை செய்துள்ளதாக கூறி, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கட்டாய வீட்டு தனிமை

டில்லி: கொரோனா பரவலுக்கு இடையே, ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால், 'டில்லியில் வசிப்போர் கும்பமேளாவில் பங்கேற்று ஊர் திரும்பினால், 14 நாட்கள் கட்டாயம் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்' என, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

நடிகர்களுக்கு கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், ஹிந்தி திரைப்பட நடிகர்கள் அர்ஜுன் ராம்பால், 48, மற்றும் நீல் நிதிக் முகேஷ், 39, ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பது, பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இதனால், இருவரும் வீட்டு தனிமையில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

ஊர் சுற்றினால் பரிசோதனை

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூரில், ஊரடங்கு விதிகளை மீறி சாலையில் சுற்றியோருக்கு, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தினர். இதில், 18 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில், 12 பேர், அரசின் தனிமை முகாம்களில், 14 நாட்கள் தங்கியிருக்க அனுப்பி வைக்கப்பட்டனர்; ஆறு பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

புகைப்படம் பதிவிட்டது யார்?

புதுடில்லி: சமூக வலைதளங்களில், 'டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்' என, மரணம் அடைந்த தன் மனைவியின் புகைப்படம் பதிவேறி இருப்பதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். தவறான புகைப்படத்தை பதிவேற்றியவர் குறித்த தகவலை தாக்கல் செய்யும்படி, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 'பேஸ்புக், டுவிட்டர்' சமூக வலைதளங்கள் மற்றும் 'கூகுள்' நிறுவனத்திற்கு, உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X