பொது செய்தி

இந்தியா

வாரணாசியில் கொரோனா: பிரதமர் ஆலோசனை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் மோடி, தன் சொந்த லோக்சபா தொகுதியான, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து, அதிகாரிகளுடன், ஆய்வு நடத்தினார்உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். தன் தொகுதியில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதை தடுக்க
வாரணாசியில் கொரோனா: பிரதமர் ஆலோசனை

புதுடில்லி:பிரதமர் மோடி, தன் சொந்த லோக்சபா தொகுதியான, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து, அதிகாரிகளுடன், ஆய்வு நடத்தினார்

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். தன் தொகுதியில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அவர் ஆய்வு செய்தார்.

இது குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வாரணாசி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன், மோடி ஆய்வு செய்தார். தொகுதியில் உள்ள, வைரஸ் பரவல் நிலவரம், அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொகுதியில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளும்படி மக்களை அறிவுறுத்தும்படி கூறினார். வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஓவியருக்கு பாராட்டு



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த, வாய் பேசமுடியாத, காது கேளாத, அஜய் கர்க் என்பவர், தான் வரைந்த ஓவியத்தை, மோடிக்கு அனுப்பி வைத்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து, மோடி கடிதம் அனுப்பியுள்ளார். 'வாழ்க்கையில் கடுமையான சவால்களை சந்திக்கும்போது, தன்னம்பிக்கையுடன் இருந்தால், உச்சத்தை எட்ட முடியும். மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு உதாரணமாக உள்ளீர்கள்' என, கடிதத்தில், மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-202107:06:51 IST Report Abuse
ஆப்பு அடுத்த மே.வங்க பரப்புரை எங்கே? கொரோனா பரப்ப கூட யாரெல்லாம் போறாங்க?
Rate this:
Cancel
19-ஏப்-202107:05:03 IST Report Abuse
ஆப்பு பிரதமருக்கு ஒரு ஓவியத்தை அனுப்பிச்சுட்டாலே உச்சத்தை தொட்டமாதிரியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X