பொது செய்தி

இந்தியா

என் சகோதரருக்கு உதவுங்கள்: அமைச்சர் பரபரப்பு 'டுவிட்'

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள என் சகோதரருக்கு, காஸியாபாத் மருத்துவமனையில் இடம் கிடைத்திட உதவுங்கள்' என, மத்திய அமைச்சர் வி.கே.சிங், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.முன்னாள் ராணுவ ஜெனரலாக பதவி வகித்தவர், வி.கே.சிங், 69. இவர், பணி ஓய்வு பெற்ற பின், பா.ஜ.,வில் இணைந்தார்.கடந்த, 2014 மற்றும், 2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின்
சகோதரர், உதவுங்கள், அமைச்சர், டுவிட்

புதுடில்லி:'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள என் சகோதரருக்கு, காஸியாபாத் மருத்துவமனையில் இடம் கிடைத்திட உதவுங்கள்' என, மத்திய அமைச்சர் வி.கே.சிங், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் ராணுவ ஜெனரலாக பதவி வகித்தவர், வி.கே.சிங், 69. இவர், பணி ஓய்வு பெற்ற பின், பா.ஜ.,வில் இணைந்தார்.கடந்த, 2014 மற்றும், 2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் காஸியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், உ.பி.,யின் காஸியாபாத்தைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட, தன் சகோதரருக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்க உதவும்படி கோரிக்கை விடுத்து, தனது 'டுவிட்டர்' சமூகவலைளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பதிவை, அமைச்சர் வி.கே.சிங், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து, அதில், காஸியாபாத் மாவட்ட கலெக்டரையும் இணைத்தார்.இந்த பதிவை தவறாக புரிந்து கொண்ட பலர், 'மத்திய அமைச்சரின் சகோதரருக்கே இந்த நிலையா' என்றும், 'உ.பி., மாநிலத்தில் மருத்துவ வசதிகள் மோசமாக இருக்கிறது' என்றும் பதிவிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த பதிவை நீக்கிய அமைச்சர், வி.கே.சிங், அது குறித்து தன் டுவிட்டர் பக்கத்திலேயே விளக்கமும் அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: மருத்துவமனை யில் அனுமதிக்க, நான் உதவி கேட்ட நபர், என் உறவினர் அல்ல. என் தொகுதியை சேர்ந்த நபருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திடவே, அந்த பதிவை பகிர்ந்தேன்.

என் பதிவு அரசு கவனத்துக்குச் சென்று, அந்த நபருக்கு உதவியும் கிடைத்துவிட்டது. இதை சரியாக புரிந்து கொள்ளாத பலர், அவசரப்பட்டு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-ஏப்-202121:21:40 IST Report Abuse
sankaseshan அப்போஸ்தலனுக்கு நல்லது நடந்தரதுநியாபகம் வராது கெடுதல் நியாபகம் வரும் மீட்டுஎடுக்க பட்டவர்களில் உன்மத துக்காரனும் உண்டு இதையெல்லாம் அவ்வப்போது சொல்லணும் இல்லாவிட்டால்மறந்து விடுவாய் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஏப்-202111:35:06 IST Report Abuse
sankaseshan புராணத்துக்கு தலை கீழாகத்தான் யோசிக்க தெரியும் மறைந்த சுஷ்மா ஸ்வராஜும் VK சிங்கும் வளைகுடா நாடுகளில் இருந்தும் வேறுசில நாடுகளில் தவித்த நம்நாட்டு மக்களை வேறுபாடு காட்டாமல் மீட்யெடுத்தனர் தெரியுமா
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
19-ஏப்-202112:34:21 IST Report Abuse
Apposthalan samlinஉத்தர பிரதேஷ் பற்றி பேசினால் வளைகுடா பற்றி பேசுகிறீர் என்ன சம்மந்தம்...
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202115:44:18 IST Report Abuse
Jayஏனெனில், இவர்கள் அரபு அடிமையாவும், சிலர் ரோமின் அடிமையாவும், அங்கெல்லாம் பாலாறும் தேனாறும் பாய்வது போன்றும், இங்கு அனைத்திற்கும் நோட்டை சொல்லும் மேதாவிகளாக இருப்பதால் இழுக்கின்றோம்....
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-ஏப்-202111:08:15 IST Report Abuse
pradeesh parthasarathy எது எப்படியோ ... பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி கிடைக்க நேரிடையாக இடைபட்டு உதவிகளை செய்தவர் வி.கே.சிங் கை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X