பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிகளில் கொட்டியது மழை: விலங்குகளுக்கு தாகம் தீர்ந்தது; உணவு கிடைத்தது

Added : ஏப் 19, 2021
Share
Advertisement
கோவை:வனத்தில் பெய்த மழையால் வறட்சி நீங்கி வனவிலங்குகளுக்கு, தேவையான குடிநீர் மற்றும் தீவனம் கிடைத்துள்ளது. வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.கோவை வனக்கோட்டம் ஏழு வனச்சரகங்களுடன் பறந்து விரிந்து உள்ளது. யானை, புலி, குரங்கு, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இங்கு உள்ளன.ஆண்டுதோறும், கோடை காலத்தில் வனப்பகுதியில், வறட்சி ஏற்பட்டு அதனால், வனவிலங்குகளுக்கு உணவு
 வனப்பகுதிகளில் கொட்டியது மழை: விலங்குகளுக்கு தாகம் தீர்ந்தது; உணவு கிடைத்தது

கோவை:வனத்தில் பெய்த மழையால் வறட்சி நீங்கி வனவிலங்குகளுக்கு, தேவையான குடிநீர் மற்றும் தீவனம் கிடைத்துள்ளது. வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.கோவை வனக்கோட்டம் ஏழு வனச்சரகங்களுடன் பறந்து விரிந்து உள்ளது. யானை, புலி, குரங்கு, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இங்கு உள்ளன.ஆண்டுதோறும், கோடை காலத்தில் வனப்பகுதியில், வறட்சி ஏற்பட்டு அதனால், வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில், சிக்கல் ஏற்படுவது வழக்கம்.இந்தாண்டு, கடந்த பிப்., இறுதியிலேயே அதிக வெயில் காரணமாக, வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது.வனத்துறை சார்பில், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மழை பொழிவு இருந்தது. இதனால், வனத்தில் வறட்சி நீங்கி, வனவிலங்குகளுக்கு தேவையான நீர் மற்றும் தீவனம் கிடைத்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'மழையால், வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது இருக்காது. கோடையில் ஏற்படும் வனத்தீ ஏற்படும் அபாயமும் நீங்கியுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X