எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ 2வது திட்டத்தில் பிரமாண்டம்

Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், பட்ரோடு - ஆலந்துார் மெட்ரோ நிலையங்கள் இடையே, போக்குவரத்து நெருக்கடி இன்றியும், விரைவாகவும் புதிய மெட்ரோ பாதை அமைப்பதற்கு ஏதுவாக, கத்திப்பாராவில், 'யு' வடிவத்தில், புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, தரைமட்டத்திலிருந்து, 24 மீட்டர் உயரத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இரண்டாவது
மெட்ரோ 2வது திட்டத்தில் பிரமாண்டம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், பட்ரோடு - ஆலந்துார் மெட்ரோ நிலையங்கள் இடையே, போக்குவரத்து நெருக்கடி இன்றியும், விரைவாகவும் புதிய மெட்ரோ பாதை அமைப்பதற்கு ஏதுவாக, கத்திப்பாராவில், 'யு' வடிவத்தில், புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, தரைமட்டத்திலிருந்து, 24 மீட்டர் உயரத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இரண்டாவது திட்டத்தில், 37 மீட்டர் உயரத்தில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயில், இரண்டாவது திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ.,க்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில், மாதவரத்தில் இருந்து, போரூர், கத்திப்பாரா வழியாக, சோழிங்கநல்லுார் வரை, 47 கி.மீ., பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், 41.17 கி.மீ., பாதை தரைக்கு மேல் பாலத்திலும், 5.83 கி.மீ., பாதை சுரங்கத்திலும் அமைக்கப்பட உள்ளது.இப்பாதையில், 48 நிலையங்கள் உள்ளன. இதில், 41 நிலையங்கள் தரைக்கு மேல் பாலத்திலும், 7 நிலையங்கள் சுரங்கத்திலும் கட்டப்பட உள்ளன.


கத்திப்பாராவில், 'யு' வடிவில் பாலம்

கத்திப்பாரா பகுதியில் அமைக்கப்படவுள்ள, 'யு' வடிவ பாலத்தின் பாதை, கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கத்திப்பாராவில், ஜி.எஸ்.டி.,சாலை பெரிய மேம்பாலம், அதன் அருகில், ஆலந்துார் - கோயம்பேடு மற்றும் ஆலந்துார் - கிண்டி - விம்கோநகர் மெட்ரோ ரயில் பாலங்களும் உள்ளன. இதில், ஆலந்துார் - கோயம்பேடு மெட்ரோ ரயில் பாதை, கத்திப்பாரா பாலத்திற்கும் மேல், தரை மட்டத்திலிருந்து, 24 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இப்பாலங்களுக்கு மேல், இரண்டாவது திட்ட புதிய மெட்ரோ பாதைக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.இதற்காக, பட்ரோடு - ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் இடையே, 37 மீட்டர் உயரத்தில், பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பட்ரோடு - ஆலந்துார் நிலையம் இடையே, 950 மீட்டர் நீளத்தில் மேம்பால பாதை அமைக்கப்படுகிறது. இது, பட்ரோடு நிலையத்தில், 13 மீட்டர் உயரத்தில் துவங்கி, கத்திப்பாரா பாலத்தின் மேல், 37 மீட்டர் உயரத்தில் சென்று, ஆலந்துார் நிலையம் பின்புறம், புதிய நிலையம் வழியாக, பரங்கிமலை ரயில் நிலையம் சென்றடைகிறது.

இதற்கான இறுதிகட்ட திட்ட அறிக்கையை, ஒப்பந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.பட்ரோடு - ஆலந்துார் - பரங்கிமலை நிலையங்கள் இடையே, இடத்திற்கு ஏற்றாற் போல், 20 - 25 மீட்டர் இடையே, சிமென்ட் துாண்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது, 'யு' வடிவ பாலம் அமைத்து, அதன் மீது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 'யு' வடிவ பாலம், 20 - 25 மீட்டர் நீளத்துக்கு வெளி யிடங்களில் தயாரிக்கப்பட்டு, கனரக வாகனங்களில் கத்திப்பாராவுக்கு கொண்டுவரப்பட்டு, பிரமாண்ட கிரேன்கள் உதவியுடன் பாலம் அமைக்கப்பட உள்ளது.

கத்திப்பாரா சந்திப்பு, சென்னையின் முக்கிய சாலைகளின் சந்திப்பு மையமாக உள்ளதால், மெட்ரோ ரயில் புதிய பாதை கட்டுமானத்தால், சாலை போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி பணியை முடிக்க, 'யு' வடிவ பாலம் வெளியிடத்தில் தயாரிக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.


நெரிசல் குறையும்

'யு' வடிவ பாலம், 20 - 25 மீட்டர் நீளத்தில் வெளியிடத்தில் தயாரிக்கப்பட்டு கொண்டு வருவதால், விரைவாக பணி முடியும். கத்திப்பாரா பகுதியில், சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.மெட்ரோ, இரண்டாவது திட்டத்தில், தேவையான இடத்தில் துாண்கள் மீது அமைக்கப் படும், 'யு' வடிவ பாலம், இரு வழி ரயில் பாதைகளும் அமைக்கும் வகையில் அகலம் அதிகமாக தயாரிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இப்பாதைக்கான இறுதிகட்ட திட்ட அறிக்கை வந்ததும் தான், திட்ட கட்டுமான பணியில் மாற்றங்கள், இறுதி முடிவுகள் குறித்த, முழுவிபரமும் தெரியவரும் என, மெட்ரோ ரயில் அதிகாரி கூறினார்.


முக்கிய இடங்களுடன் இணைப்புமெட்ரோ ரயில், இரண்டாவது திட்டத்தில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ நிலையங்கள், முக்கிய இடங்களுடன் இணைக்கப்படும் மூன்று வழித்தடங்களும், முக்கிய இடங்கள், சாலைகள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நிறுத்தங்களுக்கு அருகே இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இதனால், புதிய மெட்ரோ நிலையங்களில் இருந்து, அருகில் உள்ள முக்கிய இடங்களுக்கு சுரங்கப்பாதை அல்லது, நடை மேம்பால வசதி செய்யப்படும். மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டப்பணி முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்கியதும், சென்னை மாநகரம் மற்றும் அருகாமையில் உள்ள புறநகரங்களில், சாலை போக்கு வரத்து நெருக்கடி, 60லிருந்து, 70 சதவீதம் வரை குறையும். சுற்றுப்புற சூழல் மாசடைவது கணிசமாக குறையும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.


ஆலந்துார், பரங்கிமலையில்புதிய நிலையங்கள்

மாதவரம் - சோழிங்கநல்லுார் புதிய மெட்ரோ ரயில் பாதை, ஆலந்துார் மற்றும் பரங்கிமலை வழியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், தற்போது இயங்கி வரும், ஆலந்துார், பரங்கிமலை மெட்ரோ நிலையங்களுடன் இப்பாதை இணைக்கப்படலாம் என முதலில் கூறப்பட்டது.

எனினும், புதிய பாதை இந்நிலையங்களுடன் இணைக்கப்படாது. ஆலந்துார், பரங்கிமலை மெட்ரோ நிலையங்கள் அருகில், இப்புதிய பாதை மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட்டு, இந்நிலையங்களில் இருந்து, ஆலந்துார், பரங்கிமலை நிலையங்களுக்கு இணைப்பு கட்டடங்கள் அல்லது, நடை மேம்பாலங்கள் வழியாக இணைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஒப்பந்ததாரர்கள் நியமனம்மாதவரம் - சோழிங்கநல்லுர் மெட்ரோ புதிய பாதை மற்றும் நிலையங்கள் அமைக்க, ஆறு பிரிவுகளாக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாதவரம் வேணுகோபால்நகரில் இருந்து, சி.எம்.பி.,டி., இடையே, 10.02 கி.மீ., மேம்பால ரயில் பாதை, 11 நிலையங்கள் வடிவமைத்து கட்டும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில், கொளத்துரில் இருந்து, நாதமுனி வரை, 5.83 கி.மீ., இருவழி சுரங்க பாதை மற்றும் ஐந்து சுரங்க நிலையங்கள் வடிவமைத்து கட்டுவதற்கு ஒப்பந்தாரர் நியமிக்க பட்டுள்ளார்.

சி.எம்.பி.டி., யில் இருந்து, புழுதிவாக்கம் இடையே, 12.43 கி.மீ., மேம்பாலம், 12 நிலையங்கள் கட்டுவதற்கும், புழுதிவாக்கத்தில் இருந்து, சோழிங்கநல்லுார் வரை, 11.61 கி.மீ., மேம்பாலம், மற்றும் 11நிலையங்கள் வடிவமைத்து கட்டுவதற்கும் ஒப்பந்த்தாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பாதை திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ பாதையில், பவர் ஹவுஸ் - போரூர் வரை இத்திட்டத்தில், 7.95 கி.மீ., மேம்பாலப்பாதையும், 9 நிலையங்களும் கட்டப்படுகின்றன. இதற்கும் ஒப்பந்தாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-- -நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
19-ஏப்-202123:19:57 IST Report Abuse
Elango மதுரை எய்மஸ் போல ஆகாமல் இருந்தால் சரி
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கான்க்ராஸ் ஏழ்மையை ஒழித்தது போல் ஆகாமல் இருந்தாலும் சரி....
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
19-ஏப்-202123:19:08 IST Report Abuse
PRAKASH.P Currently require more Support economically for public.. government think about give money to people instead investment. It can be done once situation is settled
Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
25-ஏப்-202122:03:37 IST Report Abuse
Dubuk Uஇதுவம் ஏழைகளுக்கான உதவி தான் இந்தமாதிரி திட்டத்தில் கல்தூக்கும் தொழிலாளியின் வேலைக்குத்தான் ஊதியம் ......
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
19-ஏப்-202121:29:13 IST Report Abuse
தமிழ்வேள் கருத்துக்கள்ஏதேனும் வில்லங்கமாக வந்தனவா? மூன்று கருத்துக்களில் ஒன்றைக்கூட காலையிலிருந்தே காணோம் ....[அதில் ஒன்று அடியேன் பதிவிட்டது ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X