பொது செய்தி

இந்தியா

பஞ்சாப் அணியை பந்தாடியது டில்லி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிகர் தவான் 92 ரன் விளாச டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நல்ல

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிகர் தவான் 92 ரன் விளாச டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news



மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நல்ல துவக்கம் தந்தது.

லுாக்மேன் மெரிவாலா வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய அகர்வால், அவேஷ் கான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 25 பந்தில் அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த போது மெரிவாலா பந்தில் அகர்வால் (69) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் லோகேஷ் ராகுல் (61) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். கிறிஸ் கெய்ல் (11), நிக்கோலஸ் பூரன் (9) ஏமாற்றினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. ஹூடா (22), ஷாருக்கான் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news




தவான் கலக்கல்

கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (32) நம்பிக்கை தந்தார். ஸ்டீவ் ஸ்மித் (9) ஏமாற்றினார். பவுண்டரிகளாக விளாசிய ஷிகர் தவான், ஐ.பி.எல்., அரங்கில் 43வது அரைசதமடித்தார். இவர், 49 பந்தில் 92 ரன் (13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அவுட்டானார். கேப்டன் ரிஷாப் பன்ட் (15) நிலைக்கவில்லை. ஷமி வீசிய 17 வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஸ்டாய்னிஸ், ரிலே மெரிடித் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் (27), லலித் யாதவ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஏப்-202116:18:36 IST Report Abuse
ShivRam ShivShyam //பஞ்சாப் அணியை பந்தாடியது டில்லி// அப்போ மட்டையானது யாரு ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X