இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்விமான நிறுவனங்கள் மீது வழக்குபுதுடில்லி: 'மஹாராஷ்டிராவில் இருந்து டில்லி வந்த, 'இண்டிகோ, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா' விமானங்களில், பயணியரிடம் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்று உள்ளதா என்பதை முறையாக ஆய்வு செய்யவில்லை' என, டில்லி அரசு புகார் கூறியது. இது தொடர்பாக, நான்கு விமான நிறுவனங்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்,


இந்திய நிகழ்வுகள்விமான நிறுவனங்கள் மீது வழக்கு

புதுடில்லி: 'மஹாராஷ்டிராவில் இருந்து டில்லி வந்த, 'இண்டிகோ, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா' விமானங்களில், பயணியரிடம் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்று உள்ளதா என்பதை முறையாக ஆய்வு செய்யவில்லை' என, டில்லி அரசு புகார் கூறியது. இது தொடர்பாக, நான்கு விமான நிறுவனங்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ., பிரமுகர் மர்மச்சாவு

சக்தா: மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில், பா.ஜ., உறுப்பினரான திலீப் கீர்த்தானியா, 31, அவரது வீட்டின் அருகே நேற்று காலை, உடல் முழுதும் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இந்த மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரிக்கும் நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தான், திலீப்பை கொலை செய்துள்ளதாக கூறி, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மருத்துவமனையில் தீ: நான்கு பேர் பலி

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோயாளிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து, மற்ற வார்டுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். தீயில் சிக்கி, நான்கு கொரோனா நோயாளிகள் இறந்தனர். மின் கசிவால் தீ பிடித்ததாக தெரிகிறது. இந்த விபத்து பற்றி, உயர்மட்ட விசாரணைக்கு, ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பைக்கில் நாயை கட்டி இழுத்து சென்றவர் கைது

மலப்புரம்: கேரளாவில், நாயை 'பைக்'கில் கட்டிவைத்து, சாலையில் இழுத்துச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியில், கான்ஸ்டன்ட் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவரது காலணியை, நேற்று முன்தினம், நாய் ஒன்று கடித்து விட்டது. இதனால் ஆத்திரம்அடைந்த சேவியர், அந்த நாயை, தன் பைக்கில் கட்டிவைத்து, பைக்கை வேகமாக இயக்கிச் சென்றார். இதில், அந்த நாய் தரதரவென சாலையில் இழுத்துச்செல்லப்பட்டது.

இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஒருவர், அதை, 'வீடியோ'வாக எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவு செய்தார்.இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ், சேவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், சேவியரை, போலீசார் நேற்று கைது செய்தனர். எனினும், பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே, படுகாயம் அடைந்த நாய்க்கு, கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழக நிகழ்வுகள்

துப்பாக்கி முனையில் தொழிலதிபர் கடத்தல்

விழுப்புரம்: துப்பாக்கி முனையில், சென்னை தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில், விழுப்புரம் காட்டு பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, ஈக்காட்டு தாங்கலைச் சேர்ந்தவர் சிவன், 45; ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று, தன்னுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும், சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரா ஆகியோருடன் விழுப்புரம் வந்தார்.பகல், 2:30 மணியளவில், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள ஓட்டலில், சிவன் உள்ளிட்டோர் சாப்பிட்டனர்.

அப்போது, அங்கு வந்த மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ், சிவனை தனியாக அழைத்துச் சென்று பேசினார்.பின், நிலம் பார்க்க செல்வதாக நாகராஜ், தன் காரில் சிவன் மற்றும் ராஜேந்திராவை ஏற்றி, கண்டாச்சிபுரம் நோக்கி புறப்பட்டார். பின் தொடர்ந்து, வெங்கடேசன் உள்ளிட்டோர் சென்றனர்.மாலை, 5:00 மணிக்கு, கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், நாகராஜ் காரை மடக்கினர்.

பின், துப்பாக்கி முனையில் சிவன் மற்றும் ராஜேந்திராவை, தங்கள் காரில் கடத்தி சென்றனர். அந்த காரை பின் தொடர்ந்து நாகராஜ், தன் காரில் சென்றார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர், கண்டாச்சிபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தகவல் கூறினர். சிவன் மற்றும் ராஜேந்திராவை போனில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, சிவன் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தொழில் தொடர்பாக டீலிங் பேசுவதாகவும், தாங்களே வந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

ராஜேந்திராவோ, சேலம் அருகில் சென்று விட்டதாக கூறினார். ஆனால், அவர்களின் மொபைல் போன் டவர் சிக்னல், கண்டாச்சிபுரம் காட்டுப் பகுதியை காட்டியது. இதனால், கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள காடுகளில், எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தர்மகர்த்தா கொலை வழக்கு பேரன் உட்பட இருவர் கைது

பெண்ணாடம்: விருத்தாசலம் அருகே, கோவில் தர்மகர்த்தா கொலை வழக்கில், அவரது பேரன், நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மேலப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர், 71; அதே பகுதியில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். மனைவி, மூன்று மகன்கள், மகள் உள்ளனர்.கடந்த, 8ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர், மறுநாள், அதே பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தலை, முகத்தில் பலத்த காயங்களுடன், இறந்து கிடந்தார்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், செல்வராயரின் மூத்த மகன் வெங்கடேசனின் மகன் கிருஷ்ணா, 26, என்பவரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:மருமகள் சுகந்தி 45, உடன் செல்வராயர் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதையறிந்த கிருஷ்ணா ஆத்திரமடைந்து, நண்பரான செல்வகுமார், 35, என்பவருடன் சேர்ந்து, செல்வராயரை கல் மற்றும் கத்தியால் தாக்கி, கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் இருவர் படுகாயம்

நாகப்பட்டினம்: -மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்திய போலீசார் மீது, பெட்ரோல் குண்டு வீசியதில், இரண்டு போலீசார், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பூஜாரி வெட்டி கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் உள்ள சுடலை மாடசாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று, இங்கு திருவிழா நடந்தது. கோவிலில், தற்காலிக கடைகள் அமைப்பது, கிடா வெட்டுவது தொடர்பாக, இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில், கோவில் பூஜாரி சிதம்பரம், 45, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நடராஜ பெருமாள் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சீவலப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

பிக்கப் வாகனம் கவிழந்து இருவர் பலி

ஓசூர்: சூளகிரி அருகே, 'பிக்கப்' வாகனம் கவிழ்ந்ததில், சிறுவன் உட்பட இருவர் பலியாயினர்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மாரண்டப்பள்ளியைச் சேர்ந்த ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் எட்டு பேர், நேற்று காலை, காருபாலா கிராமத்தில் கீரை அறுவடை பணிக்கு, 'பொலீரோ பிக்கப்' வாகனத்தில் சென்றனர். சூளகிரி அடுத்த கொரலதொட்டி அருகே காலை, 9:30 மணிக்கு, சாலை வளைவில் அதிவேகமாகச் சென்ற பிக்கப் வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இதில், சீனிவாசன் மனைவி ஆஷா, 24, துரைராஜ், 16, என்ற சிறுவன் உட்பட, ஆறு பேர் காயம் அடைந்தனர். அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷா, துரைராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.


latest tamil news


அடித்து விரட்டினார் பெற்ற மகன்! 'தீப்பெட்டி வீட்டு'க்குள் வயதான பெற்றோர் அவதி

செட்டிபாளையம்:போத்தனூர் அடுத்த செட்டிபாளையம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் நடராஜ், 74. மனைவி பூபதி, 60. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நடராஜ், ஓய்வு பெற்ற போது கிடைத்த தொகையில், தற்போது வசிக்கும், 6.75 சென்ட் இடத்தை வாங்கினார்.கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் மகன் விஜயராஜ், 40 ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெரியநாயக்கன்பாளையத்தில் மனைவியுடன், தனியாக வசித்து வருகிறார்.இச்சூழலில் பெற்றோரிடம், தனது பெயரில் இடத்தை பதிவு செய்தால், வீடு கட்டித்தருவதாகவும், வங்கியில் லோன் பெற வசதியாக இருக்கும் எனவும் ஆசை காட்டியுள்ளார், விஜயராஜ்.மகன் மீதான நம்பிக்கையால், 2018, ஜூலையில், இடம் விஜயராஜ் பெயருக்கு மாறியது. அத்துடன் பெற்றோரை விஜயராஜ் கைவிட்டதாக, குற்றம் சுமத்துகிறார் நடராஜ்.தனக்கு ஆஸ்துமா தொந்தரவு, வயது மூப்பால் வேலை செய்ய முடியாது; மாத செலவிற்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் விஜயராஜ் கண்டுகொள்ளவில்லை. இடத்தை மீட்டுத்தருமாறு, மாவட்ட கலெக்டரிடம், நடராஜ் பலமுறை மனு கொடுத்துள்ளார். அதிகாரிகள் விஜயராஜிடம் விசாரணை நடத்தினர். மாதம்தோறும் பணம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.சில மாதங்கள் மட்டும் கொடுத்தவர், அதன்பின் கண்டுகொள்ளவில்லை.

ஆஸ்துமா ஒருபுறம், முதுமையின் பலவீனம் மறுபுறம் என, வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழலில், இப்பகுதி மக்கள்தான் உதவுகின்றனர்.ரேஷனில் அரிசி வாங்கி, நாட்களை ஓட்டுகின்றனர். சுற்றிலும் சிமென்ட் ஷீட், வேய்ந்த தீப்பெட்டி போன்ற அறைதான், இவர்களது வசிப்பிடம்.நடராஜ் கூறுகையில், ''கடந்த தீபாவளியன்று உதவி கேட்டு போன எங்களை, மாமனார் குடும்பத்துடன் சேர்ந்து, மகன் அடித்து விரட்டினான். அது பரவாயில்லை. இடத்தை மீட்டுக் கொடுத்தால், அதனை விற்று வரும் தொகையை வங்கியில் போட்டு, கிடைக்கும் வட்டி பணத்தில் எங்கள் வாழ்நாளை கழித்து விடுவோம். கணவரை இழந்த எனது மகளுக்கும் உதவ முடியும்,'' என்றார்.அதிகாரிகள் மனது வைக்க வேண்டும்.


latest tamil news


பட்டப்பகலில் வீட்டில் தங்கம் வெள்ளி திருட்டு
அவிநாசி:கருவலுார், நைனாம்பாளையம் கோவில்பாளையம் ரோடு பகுதியில் வசிப்பவர் தங்கராஜ், 35. நேற்று காலை, தனது மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று, மதியம் வீடு திரும்பினார்.பூட்டப்பட்டிருந்த வீட் டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, ஆறு சவரன் தங்கம் மற்றும், 200 கிராம் வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதே போன்று, அதே பகுதியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த ரங்கசாமி, 43 என்பவரது வீட்டிலும், இரண்டு கிராம் தங்கம், 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அவிநாசி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

நாணயங்களை கொட்டி திசை திருப்பி ரூ 56 ஆயிரம் கொள்ளை

திருப்போரூர் : கண்டிகையில், வங்கி வாசலில் நாணயங்களை கொட்டி, காவலாளியை திசை திருப்பி, அவரது துணிப்பையில் இருந்த, 56 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

கேளம்பாக்கம் அடுத்த, வேங்கடமங்கலம், சுபாஷ் சந்திர போஸ் நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கர், 41; தனியார் பள்ளி காவலாளி. இவருக்கு, மனைவி சின்ன பொண்ணு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று முன்தினம், சங்கர், தன் உறவினர் வங்கிக் கணக்கில், 56 ஆயிரம் ரூபாய் செலுத்துவதற்காக, கண்டிகையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார்.சில காரணங்களால், வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், வெளியே வந்த அவர், துணிப்பையில் வைத்திருந்த, 56 ஆயிரம் ரூபாயை,தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து, மொபைல் போனில், உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சங்கர் அருகே, நாணயங்களை கொட்டிவிட்டு, 'உங்கள் நாணயங்களா இது' என, திசை திருப்பினர்.அவர் நாணயங்களை எடுத்தபோது, மர்ம நபர்கள், பணப்பையை கொள்ளையடித்து, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.பணப்பை திருடுபோனதை அடுத்து, சங்கர், தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், வங்கியின், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, வெங்கம் பாக்கத்தைச் சேர்ந்த இரு வாலிபரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X