அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொறுப்புடன் செயல்படுங்கள்! பா.ஜ., முருகன் அறிவுரை

Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பல்லடம்:'கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசியல்வாதிகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், நேற்று, பா.ஜ., மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:முதல் அலை போன்றே, கொரோனா இரண்டாவது அலையை விரட்ட அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு
 பொறுப்புடன் செயல்படுங்கள்! பா.ஜ., முருகன் அறிவுரை

பல்லடம்:'கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசியல்வாதிகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், நேற்று, பா.ஜ., மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:முதல் அலை போன்றே, கொரோனா இரண்டாவது அலையை விரட்ட அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தைரியம் தர வேண்டிய, அரசியல்வாதிகள் பொறுப்புணர்வின்றி செயல்படுகின்றனர்.தடுப்பூசி குறித்து குற்றம்சாட்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் தடுப்பூசி போட்டுள்ளனர். அரசியல்வாதிகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக பா.ஜ., மண்டல கூட்டத்தில் அவர் பேசுகையில், ''தாய்மார்கள் ஓட்டு எப்போதும் தி.மு.க.,வுக்கு கிடைக்காது; அதன்படி, கருணாநிதி வரிசையில் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார். சட்டசபை தேர்தலை போன்றே உள்ளாட்சி தேர்தலிலும், கட்சியினர் திறமையாக பணியாற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
20-ஏப்-202107:00:14 IST Report Abuse
P Sundaramurthy அப்பனே முருகா, வேல் யாத்திரை உண்டா
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஏப்-202101:34:01 IST Report Abuse
தமிழவேல் என்னது, திரும்பவும் தேர்தலா 😮...
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
20-ஏப்-202106:34:45 IST Report Abuse
மணி கும்பமேளா?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202106:30:43 IST Report Abuse
g.s,rajan மக்கள் ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால்,வேலை இழப்பால் ,தொழில் நசிவினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நித்தம் வாழ்க்கை நடத்த படாத பாடு படுகின்றனர் .ஏற்கனவே கொரோனா பாதிப்பால் நாடு சீரழிந்து உள்ளது.இந்தியாவில் இப்போது இருக்கும் பொருளாதார சரிவை ஈடு கட்ட இன்னும் பழைய படி நிலை வருவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவே பொது மக்களுக்கு பண உதவி மற்றும் பொருள் உதவி தேவையான அளவு செய்யுங்க ,ஓரளவு அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி பண்ணுங்க .அதுதான் தற்போது மோடிஜியின் பிஜேபி அரசு செய்ய வேண்டும் .விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும் அங்கே போகாதே இங்கே போகாதே வீட்டுக்குளேயே இரு என்று பொதுமக்களை அறிவுறுத்துவதால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை .வருமானத்துக்கு வழி செய்யுங்க ,தேவையான பொருள் அளித்து தகுந்த நெருக்கடியான நேரத்தில் முடிந்த அளவு உதவி செய்யுங்க அதுதான் இப்பொழுது மிக மிக அவசியம் வெறும் அட்வைஸ் யாருக்கு வேணும் .எனவே தூக்கிக் கடாசுங்க அட்வைஸை . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X