பொது செய்தி

தமிழ்நாடு

கோடையில் உடல் நலம் காக்கும் கீரை உற்சாகமாய் உழைக்கும் விவசாயிகள்

Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், இயற்கை ஏதாவது ஒரு வகையில், மனிதனின் உடல் நலனை காக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னைக்கு அருகே உள்ள கிராமங்களில், கீரை விவசாயம், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சென்னை, செங்குன்றம் அருகே, கோணிமேடு, லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம், பம்மதுகுளம், எராங்குப்பம், கிருஷ்ணாம்பேட்டை, பழைய பம்மதுகுளம், சரத்கண்டிகை
 கோடையில் உடல் நலம் காக்கும் கீரை  உற்சாகமாய் உழைக்கும் விவசாயிகள்

சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், இயற்கை ஏதாவது ஒரு வகையில், மனிதனின் உடல் நலனை காக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னைக்கு அருகே உள்ள கிராமங்களில், கீரை விவசாயம், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னை, செங்குன்றம் அருகே, கோணிமேடு, லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம், பம்மதுகுளம், எராங்குப்பம், கிருஷ்ணாம்பேட்டை, பழைய பம்மதுகுளம், சரத்கண்டிகை உள்ளிட்ட கிராமங்கள், பசுமை பின்னணியில், கீரை விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளன.இந்த கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஆண், பெண் என பலரும், விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்த்தல் தொழிலை உற்சாகமாக செய்து வருகின்றனர்.

இங்கு, 100 ஏக்கரில், அரைகீரை, சிறு கீரை, முருங்கை கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி கீரை, புளிச்ச கீரை, மணத்தக்காளி கீரை, பாளை கீரை, முடக்கத்தான் கீரை, கரிசலாங்கன்னி, வெண்டைக்காய், பாகற்காய், காராமணி உள்ளிட்டவை விளைகின்றன.இந்த கிராமங்களில் இருந்து தினமும், காலை, மாலை இரு வேளையும், அனைத்து வகையான கீரையும்
பறிக்கப்பட்டு, 15 முதல், 20 டன் வரை, சரக்கு வாகனங்கள் மூலம், சென்னை சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை, அம்பத்துார், ஆவடி, தி.நகர், அண்ணாநகர், கோயம்பேடு என, பெரிய சந்தைகள்
மட்டுமின்றி, செங்குன்றம், மாதவரம், கொளத்துாரில் உள்ள சிறிய கடைகளுக்கும், எடுத்து செல்லப்படுகின்றன.கீரை தோட்டங்களில், 8 முதல், 10 ரூபாய்க்கு கிடைக்கும் கீரை கட்டு, சென்னை சந்தைகளில், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உரிய நேரத்தில் சந்தைக்கு சென்றால் தான், மொத்தமும் விற்பனையாகும்.

காலதாமதமானால், மறுநாள் இருப்பு வைத்து விற்க முடியாத நிலையில், குப்பையில் தான் வீசப்படும். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால், மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்ட நிலையில், மக்கள், தங்களின் உடல் நலம் காக்க, கீரை, காய்கறிகளை மட்டுமே வாங்கி
பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


கீரை விதை மற்றும் உரத்தின் விலை அதிகரித்தாலும், மருத்துவ குணமுள்ள, உடல் நலம்
காக்கும் கீரையை விளைவித்து, உரிய நேரத்தில் அறுவடை செய்து, மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கீரை, காய்கறிகளுக்கானவரவேற்பு, கடந்தாண்டு முதல் அதிகரித்து உள்ளது.

- பழைய பம்மதுகுளம் விவசாயிகள்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
19-ஏப்-202123:24:22 IST Report Abuse
PRAKASH.P But today generation totally forgot all benefits of these and they are not ready to sp time to clean and make food. Future will face more vitamins deficiency. After sometime, we will forget type of these items
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
19-ஏப்-202116:20:12 IST Report Abuse
vbs manian ஏழை மக்களுக்கான அமிர்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X