பொது செய்தி

தமிழ்நாடு

இரவு பணி ஊழியர்கள் எப்போது தடுப்பூசி போடலாம்?

Added : ஏப் 19, 2021
Share
Advertisement
கோவை:தடுப்பூசி போட்டுக்கொள்வதில், மக்களுக்கு தொடர்ந்து அச்சம் இருந்து வருகிறது. 'நாங்களும் இதே தடுப்பூசியைதான் போட்டுக்கொண்டுள்ளோம். இதுவரை யார் உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' என்கின்றனர் மருத்துவர்கள். தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு, தெளிவான விளக்கம் அளிக்கிறார், இந்துஸ்தான் மருத்துவமனையின்மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில்குமார்.தடுப்பூசி
 இரவு பணி ஊழியர்கள் எப்போது தடுப்பூசி போடலாம்?

கோவை:தடுப்பூசி போட்டுக்கொள்வதில், மக்களுக்கு தொடர்ந்து அச்சம் இருந்து வருகிறது. 'நாங்களும் இதே தடுப்பூசியைதான் போட்டுக்கொண்டுள்ளோம். இதுவரை யார் உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' என்கின்றனர் மருத்துவர்கள். தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு,
தெளிவான விளக்கம் அளிக்கிறார், இந்துஸ்தான் மருத்துவமனையின்மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில்குமார்.



தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா?



தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம்; பாதுகாப்பானது. இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பக்கவிளைவு எதுவும் வராது. உடல்வலி, லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படலாம். மற்றபடி, உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.


நடிகர் விவேக் மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து?



இன்று அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.தடுப்பூசி போடவில்லை என்றாலும், இந்தியாவில் இருதய நோயால் பலர் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். நடிகர் விவேக்குக்கு தடுப்பூசி போட்ட பிறகு, மாரடைப்பு வந்துள்ளது. இது ஒரு 'கோ இன்சிடென்ஸ்'தான். மக்கள் அச்சப்பட தேவையில்லை.



தடுப்பூசி போட்டவர்கள் யாரேனும், பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா?



இதுவரை எட்டு கோடி பேருக்கு மேல், தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் டாக்டர்கள், நர்ஸ் போன்ற முன்கள பணியாளர்கள். அதில் பலர் முதியவர்கள், இருதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள். தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை.அதனால் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.

டாக்டர்கள் முதலில் போட்டுக்கொண்டு, மற்றவர்களுக்கு வைத்தியம் பார்க்கின்றனர். இதை விட நம்பகத்தன்மை வேறு என்ன வேண்டும். இந்த தடுப்பூசி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கும் எந்த பாதிப்பும் இல்லை.


மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?



தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் மது அருந்தாமல் இருப்பது அவசியம். அப்போதுதான் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். இரண்டு டோஸ் போட்ட பிறகு, இரண்டு வார கால இடைவெளிக்கு பிறகு, மீண்டும் எடுத்துக்கொள்ளலாம். மீறி மது குடித்தால், உடலில் உள்ள நீர் சத்து குறையும். அவர்களுக்கு வேறு ஏதாவது நோய் இருந்தால், அதன் மூலம் பாதிப்பு வரலாம்.



நைட் டூட்டி பார்ப்பவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

வேலை நேரத்தைப்பற்றி பிரச்னை இல்லை. ஊசி போட்டுக்கொண்டு வேலைக்கு போனால், உடல் வலி அல்லது காய்ச்சல் வந்தால், இரவில் சிரமம் ஆகிவிடும். அதனால் ஓய்வு நாளில் தடுப்பூசி போடலாம்.



ரத்தத்தில் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சிறப்பாக உருவாக வேண்டும் என்றால், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் பலனளிக்கும். பக்கவிளைவுகள் ஏற்படாது. அதனால் சர்க்கரை அளவை நார்மலுக்கு கொண்டு வந்த பிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


முதுமை காரணமாக ஏற்கனவே பலவீனமாக இருக்கும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி தேவையா;போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமா?



அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டால், உயிருக்கு பாதிப்பு வராது. அவர்களுக்கு வேறு ஏதாவது நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், டாக்டர் ஆலோசனையின்படி போட்டுக்கொள்வதே நல்லது.



அரசு மருத்துவமனையில் போடும் ஊசிக்கும், தனியார் மருத்துவமனையில் போடும் ஊசிக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?

எந்த வித்தியாசமும் இல்லை. தனியார் மருத்துவமனைக்கும் அரசுதான் சப்ளை செய்கிறது. அதே போல் கோவாக்சின், கோவிசீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் நல்லதுதான். எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.

டாக்டர் செந்தில்குமார்


இந்துஸ்தான் மருத்துவமனை

9943750000, 9585425000

இ- மெயில்: msenthildr@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X