'போதைப்பொருள் வழக்கில் தண்டனை குறைக்கப்படாது': உச்ச நீதிமன்றம்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 'போதைப் பொருள் கடத்தல், பரிமாற்ற வழக்குகளில் கைதாவோருக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருட்களுடன் கைதான ஒருவருக்கு வழங்கப்பட்ட, 15 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'தண்டனை விதிக்கப்பட்டவர் ஒரு ஏழை என்பதுடன், போதைப்பொருளை கடத்தியவர்

புதுடில்லி: 'போதைப் பொருள் கடத்தல், பரிமாற்ற வழக்குகளில் கைதாவோருக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


போதைப் பொருட்களுடன் கைதான ஒருவருக்கு வழங்கப்பட்ட, 15 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'தண்டனை விதிக்கப்பட்டவர் ஒரு ஏழை என்பதுடன், போதைப்பொருளை கடத்தியவர் அல்ல, எடுத்துச்சென்றவர் மட்டுமே' என, கூறப்பட்டு இருந்தது.


latest tamil news


இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், எம்.கே.ஷா ஆகியோர், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாவது: போதைப் பொருள், பலருக்கும் மரணம் உட்பட பல்வேறு பாதிப்புகளையும், சமூக சீர்கேடுகளையும் உருவாக்குகிறது.தற்போது, நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் மாணவ - மாணவியர் உட்பட இளைஞர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.போதைப் பொருட்களை கையாளுவோர், பலருக்கும் மரணத்தை ஏற்படுத்தும் கருவிகளாக உள்ளனர். எனவே, அதனை கொண்டு செல்பவர் ஏழை என்பதால், அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என, கோர முடியாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-202119:06:35 IST Report Abuse
ஆப்பு போதைப் பொருள் கடத்தியவன் ரொம்ப நல்லவன் மாதிரி வாழுவான்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-ஏப்-202118:54:12 IST Report Abuse
Jayvee ஏழை கொலை செய்தால் அவரை விட்டுவிடலாமா ? இன்று ஏழை என்று கம்யூனிச அடையாளம் தேடும் நபர்கள் நாளை மைனாரிட்டி என்ற அடிப்படையில் தண்டைகுறைக்க வேண்டும் என்று கேட்பார்கள் .. போதை பொருள் , ஹவாலா , தங்க கடத்தல் , மணப்பெண் கடத்தல் என்று அணைத்து வேலைகளிலும் கொடிகட்டிப்பறக்கும் அமைதி மார்கங்களுக்கு சட்டத்தில் சிறப்பு சலுகைகல் வழங்கவேண்டும் என்று தீய திராவிட அடிவருடிகள் கேட்டாலும் ஆச்சிர்யப்படுவதிற்கில்லை
Rate this:
20-ஏப்-202104:42:39 IST Report Abuse
ஆப்புஏழை கொலை செய்தால் விடமாட்டாங்க. தூக்கு, ஆயுள்தண்டனைன்னு குடுப்பாங்க. பணக்காரன் கொலை செய்தால் கோர்ட், வக்கீல், சாட்சி கலைப்பு, குறுக்கு விசாரணை, இ.பி.கோ அது இதுன்னு சொல்லி 30 வருஷம் வாய்தா வாங்கு, ஜாலியா இருந்துட்டு சுதந்திரமா செத்தே போருவாங்க. ஊழல் வழக்கில்...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஏப்-202117:17:28 IST Report Abuse
Endrum Indian "தவறு கண்டேன் சுட்டேன்" இந்த ஒரு சட்டம் தான் நம் நாட்டை நேர்வழியில் பயணிக்க வைக்கும் இல்லையென்றால் ஜாமீன் முதல் வழக்கு ஒத்தி வைப்பு வைப்பு தீர்ப்பு ஒத்தி வைப்பு வைப்பு வரை வெறும் தொடர் கதையாகவே சென்று கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதி பணக்காரன் நடிகன் வழக்குகளில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X