பொது செய்தி

இந்தியா

‛ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'; ரயில்வே இயக்குகிறது

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : நாடு முழுவதும் மருத்துவ திரவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயிலை ரயில்வே இயக்க உள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு முக்கிய பங்கு வகிக்கிறது.பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்
Oxygen Express Trains, Railways, India Fight Covid, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், ரயில்வே

புதுடில்லி : நாடு முழுவதும் மருத்துவ திரவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயிலை ரயில்வே இயக்க உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு முக்கிய பங்கு வகிக்கிறது.பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவ திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே இயக்க உள்ளது.'மஹாராஷ்டிராவுக்கு முதல் கட்டமாக இன்று மருத்துவ திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளன. இன்னும் சில நாட்களில் நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்' என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


latest tamil news


இதற்கிடையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் டில்லியில் இரண்டு ரயில் நிலையங்களில் தலா இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் 50 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் நந்துர்பாரில் கொரோனா நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள ரயில் பெட்டிகளில் வெப்பத்தை குறைக்க சொட்டு நீர் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Nellai,இந்தியா
19-ஏப்-202114:30:28 IST Report Abuse
babu காசை கொடுத்து காடுகளை அழித்து அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டினோம் நேற்று. காசை கொடுத்து காற்று வாங்க முடியாமல் காவு கொடுத்து கொண்டிருக்கின்றோம் நமது அறிவின்மையால் இன்று. ஒழுக்கம், பண்பாடு இல்லை என்றால் அழிவுகள் வரிசையில் காத்து இருக்கின்றன நம்மை காவு வாங்க...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-ஏப்-202108:12:19 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஆப்பு அவர்களே உங்களுக்கு எதையும் நல்லதாக நினைக்க தோன்றதா. மனிதன் என்றால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
19-ஏப்-202106:03:08 IST Report Abuse
ஆப்பு ஆக்சிஜன் திருவிழா ஆரம்பமாயிருச்சு.
Rate this:
RAMESH - chennai,இந்தியா
19-ஏப்-202116:15:50 IST Report Abuse
RAMESHஉங்களை இறைவன் ஆப்பு வைப்பதிலருந்து காப்பாற்றவும் இந்த oxygen உதவலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X