பொது செய்தி

இந்தியா

படைகளை 'வாபஸ்' பெற சீனா மீண்டும் முரண்டு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: லடாக் எல்லையில், 'ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங்' ஆகிய பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெற சம்மதித்த சீனா, தற்போது படைகளை திரும்ப பெறாமல் முரண்டு பிடிப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.லடாக் எல்லையில், கடந்த ஆண்டு, சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவும், சீனாவும், எல்லையில் படைகளை

புதுடில்லி: லடாக் எல்லையில், 'ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங்' ஆகிய பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெற சம்மதித்த சீனா, தற்போது படைகளை திரும்ப பெறாமல் முரண்டு பிடிப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.



latest tamil news



லடாக் எல்லையில், கடந்த ஆண்டு, சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவும், சீனாவும், எல்லையில் படைகளை குவித்தன. பதற்றத்தை குறைக்க, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அளவில் பேச்சு நடத்தப்பட்டது. ஒன்பதாவது சுற்று பேச்சில் சமரசம் ஏற்பட்டு, லடாக் எல்லையின் பாங்காங் ஏரியின் வடக்கு கரையிலிருந்து, படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன.


latest tamil news


இதன்பின் நடந்த, 10ம் சுற்று பேச்சில், கிழக்கு லடாக்கில், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை திரும்பப் பெற, இந்தியா வலியுறுத்தியது. இதற்கு சீனா சம்மதித்தது. இந்நிலையில், கிழக்கு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து, படைகளை திரும்பப் பெற, சீனா முரண்டு பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், அடுத்த சுற்று பேச்சு எப்போது நடக்கும் என, தெரியவில்லை. 'லடாக் எல்லையில், இப்போது பதற்றம் குறைந்திருந்தாலும், சீனாவின் பிடிவாதத்தால், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்' என, இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-ஏப்-202119:12:41 IST Report Abuse
bal ஏன் அவங்கள முதலில் உள்ளே விட்டாங்க..தூங்கிட்டு இருந்தாங்களா அவங்க வரும்போது.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-ஏப்-202118:54:39 IST Report Abuse
Jayvee ராவுல் வின்சிக்கு கொண்டாட்டம்தான்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஏப்-202117:37:49 IST Report Abuse
தமிழவேல் அவன் கிளம்புறேன்னு சொன்னதும், அப்போது அவனுக்கு, சார்பா எழுதுவதுதான் தான் புரியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X