அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கபசுரக் குடிநீர் வழங்குங்கள்': கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. எனவே, கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில், கட்சியினருடன் வேட்பாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கொரோனா இரண்டாவது அலை துவங்கியதும், மாநிலம் முழுதும் கட்சியினர், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
DMK, MK Stalin, Stalin, ஸ்டாலின், திமுக

சென்னை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. எனவே, கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில், கட்சியினருடன் வேட்பாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனா இரண்டாவது அலை துவங்கியதும், மாநிலம் முழுதும் கட்சியினர், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தேர்தலில் போட்டி யிட்டோர், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. எனவே, ஆர்.எஸ்.பாரதி வாயிலாக, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில் அனுமதி கோரப்பட்டது.


latest tamil news



அதை ஏற்று, கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. எனவே, தி.மு.க., வேட்பாளர்களும், மாவட்ட செயலர்களும், கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில், முழு மூச்சாக ஈடுபட்டு, கொரோனா இரண்டாவது அலையிலிருந்து, மக்களை காப்பாற்ற வேண்டும்.

கபசுரக் குடிநீர் வழங்கும் போது, அந்நிகழ்ச்சி நடக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, முறையாக கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202119:24:17 IST Report Abuse
g.s,rajan சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும் .காசு கொடு .காசுதாங்க வேணும் வெறும் .கபசுரக்குடிநீர் யாருக்கு வேணும்?? .
Rate this:
Cancel
20-ஏப்-202106:07:38 IST Report Abuse
இராமன் வடிவேலை விட சுடலைக்கு ஒப்பனை டக்கராக இருக்கு.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஏப்-202120:22:31 IST Report Abuse
g.s,rajan மக்கள் எல்லாருக்கும் தாராளமாக தங்களின் கட்சி நிதியில் இருந்து பணம் மற்றும் பொருள் உதவி செய்யங்கள்.ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனில் அக்கறை செலுத்துங்கள் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X