இந்திய பயணத்தை ரத்து செய்யுங்கள்: பிரிட்டன் பிரதமரிடம் எதிர்க்கட்சி வலியுறுத்தல்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
லண்டன்: இந்தியாவில் தினசரி கொரோனா 2 லட்சத்தை தாண்டி வருவதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.பிரிட்டன் பிரதமராக 2019-ல் போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். அவர் பிரதமரான பின்னர் முதல் முக்கிய பயணமாக இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர

லண்டன்: இந்தியாவில் தினசரி கொரோனா 2 லட்சத்தை தாண்டி வருவதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.



latest tamil news



பிரிட்டன் பிரதமராக 2019-ல் போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். அவர் பிரதமரான பின்னர் முதல் முக்கிய பயணமாக இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர இருந்தார். அச்சமயத்தில் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியதால் கடைசி நேரத்தில் அப்பயணத்தை ரத்து செய்தார். அப்பயணம் இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏப்., 26 முதல் நான்கு நாட்கள் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம் வகுக்கப்பட்டது. இங்கு கொரோனா அதிவேகமாக பரவுவதால் ஏப்., 26 அன்று ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்களை வைத்துக்கொள்ள உள்ளனர்.

இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஸ்டீவ் ரீட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது காணப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவில் புதிய பாதிப்புகள் 2 லட்சத்துக்கு மேல் பதிவாவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவுடனான பயணங்களை தடை செய்து, சிவப்பு பட்டியலில் சேர்க்க கோரி வருகின்றனர். இருப்பினும் அதனை அரசு ஏற்கவில்லை. தொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்ள அனுமதித்துள்ளது.


latest tamil news



ஜூமில் சந்தியுங்கள்!


இந்த பின்னணியில் தான் தொழிலாளர் கட்சி எம்.பி., ரீட், பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணத்தை ரத்து செய்ய கோரியுள்ளார். “உலகம் முழுவதும் புதிய வகைகள் உருவாகின்றன. மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் சொல்கிறது. பிரதமரால் இந்திய அரசுடன் ஜூம் மூலம் ஏன் சந்திப்பை நடத்த முடியவில்லை.” என கேட்டுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-202112:28:50 IST Report Abuse
Ganesan Madurai வராதீங்கடா. வந்துதான் 200 வருசமா கொள்ளை அடிச்சீங்களே.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
19-ஏப்-202110:17:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இவருக்கு அங்கே எதிர்க்கட்சியினர் விடும் எச்சரிக்கையைப் படித்தால் வேடிக்கையாக இருக்கு லண்டனில் வரைமுறையின்றி பரவுவதால் எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தின் தலைவர் இந்தியா சென்று விட்டார்
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-ஏப்-202109:01:02 IST Report Abuse
ShivRam ShivShyam இவரு இந்தியா வரேன்னு சொன்னா கொரோனா கொந்தளிக்குது .. ஜனவரி 26 க்கு வரேன்னார் .. அப்பவும் ஒரு அலை .. இப்போ வரேன்னார் .. இந்தியாவே ஸ்தம்பிக்குது .. அப்படியே ஓரமா வீடியோ கால்ல பேசிட்டு போங்க சார் புண்ணியமா போகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X