பொது செய்தி

இந்தியா

வரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: எய்ம்ஸ் தலைவர்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புது டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, “நூறாண்டுகளுக்கு முந்தைய தொற்றுநோயை பார்த்தால் இரண்டாம் அலை தான் ஆபத்தானது” என கூறியுள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகில் கொரோனா வைரஸின் பல்வேறு வகைகள் பரவி

புது டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, “நூறாண்டுகளுக்கு முந்தைய தொற்றுநோயை பார்த்தால் இரண்டாம் அலை தான் ஆபத்தானது” என கூறியுள்ளார்.



latest tamil news


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகில் கொரோனா வைரஸின் பல்வேறு வகைகள் பரவி வருகின்றன. நாம் மூன்று நான்கு விஷயங்களை செய்ய வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர கட்டுப்பாட்டு மண்டலத்தை உருவாக்கி, சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, கூட்டத்தை தடை செய்ய வேண்டும். மூன்றாவதாக தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்.


latest tamil news


ரெம்டெசிவிர் கொரோனாவுக்கு எதிராக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என சீனாவின் முதல் ஆய்வறிக்கை கூறுகிறது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை அம்மருந்து தடுப்பதாகவும், ஆனால் இறப்பை தடுக்காது என்றது. அம்மருந்து எபோலாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆன்டிவைரல் மருந்து. தற்போதைக்கு நம்மிடம் நல்ல ஆன்டிவைரல் மருந்து இல்லை. கொரோனாவுக்கு நல்ல சிகிச்சையும் இல்லை. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) சீனாக்காரன் எப்படி நோயை கட்டுப்படுத்தினான் என்பதை தெரிந்துகொண்டால் போதும் உலகம் எந்த நோயை கண்டும் பயப்படவோ, அஞ்சவோ தேவை இல்லை
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
19-ஏப்-202123:29:10 IST Report Abuse
Vena Suna பயமுறுத்துவது இவர்கள் கலை...அப்போதானே இவர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள்? நன்றாக காசு பண்ணி விட்டார்கள்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202123:28:40 IST Report Abuse
தல புராணம் அப்படிதான்னு சொல்லமுடியாது.. மோடியின் பீஜெபீ ஆட்சி முதல் அலையில் இருந்தே நாட்டுக்கு பேராபத்தாக தான் போயிட்டு இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X