காலணியை கடித்ததற்காக நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (81) | |
Advertisement
மலப்புரம்: கேரளாவில், காலணியை கடித்ததற்காக நாயை 'பைக்'கில் கட்டிவைத்து, சாலையில் இழுத்துச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியில், கான்ஸ்டன்ட் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவரது காலணியை, நேற்று முன்தினம், ஒரு நாய் கடித்து விட்டது.இதனால் ஆத்திரம்அடைந்த சேவியர், அந்த நாயை, தன் பைக்கில் கட்டிவைத்து,

மலப்புரம்: கேரளாவில், காலணியை கடித்ததற்காக நாயை 'பைக்'கில் கட்டிவைத்து, சாலையில் இழுத்துச் சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.latest tamil news


கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தின் எடக்கரா என்ற பகுதியில், கான்ஸ்டன்ட் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவரது காலணியை, நேற்று முன்தினம், ஒரு நாய் கடித்து விட்டது.

இதனால் ஆத்திரம்அடைந்த சேவியர், அந்த நாயை, தன் பைக்கில் கட்டிவைத்து, பைக்கை வேகமாக இயக்கிச் சென்றார். இதில், அந்த நாய் தரதரவென சாலையில் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஒருவர், அதை, 'வீடியோ'வாக எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவு செய்தார்.இதையடுத்து, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ், சேவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கில், சேவியரை, போலீசார் நேற்று கைது செய்தனர். எனினும், பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே, படுகாயம் அடைந்த நாய்க்கு, கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suburam - USA ,யூ.எஸ்.ஏ
24-ஏப்-202117:00:27 IST Report Abuse
Suburam அவனுங்க யானை வாயிலே வெடி வைத்தவங்களாயிற்றே. கொடூர எண்ணமும் புத்தியும் கொண்டவர்கள் .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-202111:11:28 IST Report Abuse
Girija கிராதகன் பெயர் சேவியர் , ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையம் காட்டு என்று இயேசு போதித்ததையும் மறந்த கொடூரன். இந்த போலீஸ் மட்டும் உடனே ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். இவன் மக்கள் சேவை செய்ய லாயக்கற்றவன் உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும். நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்.
Rate this:
Cancel
20-ஏப்-202115:39:12 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு எதையும் திங்கும் இனம்
Rate this:
A P - chennai,இந்தியா
20-ஏப்-202118:55:11 IST Report Abuse
A Pகண்டதையெல்லாம் தின்பதால்தான் இந்த கொடூர புத்தி வருகிறது. சாத்வீக உணவு உண்பவர் எவரும் இது போன்ற இரக்கமற்ற செயலில் ஈடுபடுவது ரொம்ப ரொம்ப அரிதிலும் அரிது. ஜீவ காருண்யத்தைப் போதித்தவர்கள் பாரத தேசத்தில் பலர் பிறந்து நல் வழி காட்டியிருந்தாலும், இது போன்ற ஈனப் பிறவிகள் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ தெரியவில்லை. ரத்தத்தைப் பார்த்து பார்த்து, கொடூர எண்ணம் மனதில் வேரூன்றி, என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று மனதில் குறு குறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X