பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்களுக்கு 'செம' வெயில்; 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021
Share
Advertisement
சென்னை: 'நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், 3 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை அதிகரிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரளா மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், 2.1 கி.மீ., உயரத்தில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி,
MoreHeat, Warning, Tamilnadu, Weather, வானிலை, வெப்பம், எச்சரிக்கை

சென்னை: 'நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், 3 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை அதிகரிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரளா மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், 2.1 கி.மீ., உயரத்தில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


latest tamil news



நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, பல மாவட்டங்களில், வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில், அதிக வெப்பநிலை நிலவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, பல மாவட்டங்களில் பரவலாக வெப்பச்சலன மழை பெய்து வந்தது. மிதமான காற்றும் வீசியது; சில இடங்களில் சூறை காற்றும் வீசியது. நேற்று முதல் பெரும்பாலான மாவட்டங்களில், மீண்டும் வெயில் துவங்கியது.சென்னையில் வறண்ட வானிலையாக இருந்த போதும், பகல் பொழுதில் கடல் காற்று வீசியதால், புழுக்கம் மிதமாக காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம், பில்லிமலையில், 3 செ.மீ., மழை பதிவானது. குன்னுார், பென்னாகரம், சங்கரிதுர்க்கம், வால்பாறை, கோபிச்செட்டி பாளையம் மற்றும் ஈரோட்டில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X