அப்போ கடந்த ஆண்டு வந்த கொரோனாவுக்கு காங்கிரஸ் மற்றும் நீங்கள் தான் காரணமா...

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
நாடு முழுதும் கொரோனாவை பரப்புவதில் முன்னோடியாக இருப்பவர்கள், பா.ஜ.,வினர் தான். அதனால் தான், கொரோனாவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, அவர்கள் யார் பேச்சையும் கேட்பதில்லை. இவர்கள், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், எந்த மாநிலத்திலும் வெற்றி பெறப் போவதில்லை.- பா.ஜ., முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா'அப்போ, கடந்த ஆண்டு வந்த கொரோனாவுக்கு, காங்கிரஸ் மற்றும் நீங்கள்
அப்போ கடந்த ஆண்டு வந்த கொரோனாவுக்கு காங்கிரஸ் மற்றும் நீங்கள் தான் காரணமா...

நாடு முழுதும் கொரோனாவை பரப்புவதில் முன்னோடியாக இருப்பவர்கள், பா.ஜ.,வினர் தான். அதனால் தான், கொரோனாவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, அவர்கள் யார் பேச்சையும் கேட்பதில்லை. இவர்கள், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், எந்த மாநிலத்திலும் வெற்றி பெறப் போவதில்லை.
- பா.ஜ., முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா


'அப்போ, கடந்த ஆண்டு வந்த கொரோனாவுக்கு, காங்கிரஸ் மற்றும் நீங்கள் தான் காரணமா...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை.சென்னை மாநகராட்சி கட்டடத்திலிருந்த, 'தமிழ் வாழ்க' பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளது. சங் பரிவாரின் எடுபிடி அரசு, அந்த இடத்தில், 'சமஸ்கிருதம் ஜெயஹோ' என்று பெயர்ப் பலகை வைப்பதற்குள், புதிய ஆட்சி மலர வேண்டும்.
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


'கம்யூ.,க்கள் ஆட்சி எந்த காலத்திலும் மலரப் போவதில்லை. நீங்கள் முட்டுக் கொடுக்கும் கட்சி தான் ஆட்சிக்கு வரும் என்பதும் உறுதியில்லை; பிறகு எதற்கு இந்த அலம்பல்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.தேவியானந்தல் சரஸ்வதி படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்துகிறேன். சரஸ்வதியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


latest tamil news
'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டித்து அறிக்கை விட்டதும், நீங்களும் அறிக்கை வெளியிட்டுள்ளீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.உர நிறுவனங்கள், 60 சதவீதம் வரை ரசாயன உரங்களின் விலையை ஏற்றின. ஆனால், அதை, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசு உர விலையை ஏற்றியதாக பொய் பிரசாரம் செய்தன. மத்திய அரசு கண்டித்ததை அடுத்து, பழைய விலைக்கே உரங்கள் விற்கப்படுகின்றன.
- நடிகை காயத்ரி ரகுராம்


'எதிர்க்கட்சிகள் எவ்வளவு அலெர்ட்டாக இருக்கின்றன என பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை விட, பா.ஜ.,வினர் இன்னும் அதிகமாக இருக்கின்றனர் போலும்...' என, சொல்ல தோன்றும் வகையில், பா.ஜ., கலாசார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை.எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் பிடிக்கும் நடிகர் விவேக். சமூக சீர்திருத்தக் கருத்துகளை துணிச்சலாக படங்களில் நடித்து காண்பித்தவர். 37 லட்சம் மரங்களை நட்டுள்ளார். அவரின் மறைவு, தமிழகத்திற்கே பேரிழப்பு தான்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'உண்மை தான். ஆனாலும் சீர்திருத்தக் கருத்துகள் என்பதை விட, சிந்தனைக்கு இனிய கருத்துகளை கூறினார் என்பது தான் சரியாக இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.இந்த ஆண்டு சினிமா நடிகர், விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதை தவிர்த்து, கொரோனா ஒழிப்பில் இரவு, பகலாக உழைக்கும் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்றோருக்குத் தான் வழங்க வேண்டும். இவர்களின் பணி அளப்பரியது.
- விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்


'நியாயம் தான். ஒன்றுக்கும் உதவாத சினிமா நட்சத்திரங்கள், கோடிகளை குவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதற்குப் பதில், கொரோனா போராளிகளுக்கு வழங்குவது தான் நியாயமானது...' என, ஒப்புக் கொள்ளத் தோன்றும் வகையில், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
19-ஏப்-202119:37:29 IST Report Abuse
த.இராஜகுமார் மரங்களை வளர்த்த விவேக் புகழ் ஓங்குக
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
19-ஏப்-202118:53:38 IST Report Abuse
S.Ganesan விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் - நல்ல கருத்தினை கூறியமைக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஏப்-202114:02:08 IST Report Abuse
r.sundaram சமஸ்க்ரிதம் ஜெய்கோ என்று போர்டு வைத்தால் சமஸ்க்ரிதம் வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது. தமிழ் வாழ்க என்ற போர்டு வைத்தவுடன் தமிழ் எவ்வளவு வளர்த்தது என்று சொல்ல முடியுமா? எதையாவது செய்து டெண்டர் விட்டு காசு பார்ப்பதே திமுகாவின் வழக்கம். அதில் இதுவும் ஒன்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X