பொது செய்தி

இந்தியா

டில்லியில் மீண்டும் முழு ஊரடங்கு: கெஜ்ரிவால் அறிவிப்பு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் இன்று (ஏப்.,19) இரவு முதல் ஏப்.,26 வரையிலான ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டில்லியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
Delhi, Lockdown, ArvindKejriwal, டில்லி, ஊரடங்கு, அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லியில் இன்று (ஏப்.,19) இரவு முதல் ஏப்.,26 வரையிலான ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டில்லியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனாவின் 4வது அலையை டில்லி எதிர்கொள்கிறது. ஒருநாளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதால், மாநில சுகாதார துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊரடங்கை தவிர வேறு வழி இல்லை. எனவே, இன்று இரவு 10 மணி முதல் ஏப்.,26ம் தேதி காலை 5 மணி வரை டில்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி மக்களை இருகரம் கூப்பி வேண்டுகிறேன். முழு ஒத்துழைப்பு அளியுங்கள்.
இது சிறிய அளவிலான ஊரடங்கு தான், 6 நாட்களுக்கு மட்டுமே. டில்லியை விட்டு வெளியேற வேண்டாம். ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். அரசு உங்களை கவனித்துக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
19-ஏப்-202115:36:00 IST Report Abuse
Rengaraj ஊரடங்கு தற்காலிகமான தடுப்பு முறை. ஒரு எச்சரிக்கை நடவடிக்கை என்றும் சொல்லலாம். நாட்டின் அணைத்து விதமான பகுதிகளிலும் வாழும் மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த நோயை முழுவதுமாக விரட்ட முடியும். அரசு மட்டுமே இதை ஒழித்து விட முடியாது. நோய் தற்காப்பு முறையை கடைபிடியுங்கள் என்று அரசும் மருத்துவர்களும் கதறி கதறி அழுது சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று இருக்கும் மக்கள் கூட்டத்தை என்ன செய்ய இயலும்? ரோட்டில் நடக்கும்போது ஒருவர் மேல் ஒருவர் இடிக்காமல் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா? அரசு சொல்லும் ஆறடி இடைவெளி வேண்டாம் குறைந்தது ஒன்றரை இடைவெளி விட்டு எங்கும் நிற்கலாமே? டீக்கடையை பார்த்தால் , ஹோட்டல்களை பார்த்தால் நம் லட்சணம் தெரியும். வரிசை என்ற கோட்பாடையே மக்கள் மறந்துவிடுகிறார்கள். பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளிலும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் கூட குடிமகன்கள் வரிசை என்பதை மறந்து கூடுகிறார்கள்.வண்டியில் சென்றால் மட்டும் மாஸ்க் தேவை என்று நினைத்து நடந்து செல்பவர்கள் அதை அணிய மறந்து விடுகிறார்கள். சென்ற வருடம் நாம் நினைத்தோம் கோடைகாலத்தில் பரவல் குறைந்து முற்றாக இது ஒழிந்துவிடும் என்று. ஆனால் இப்போது கோடைகாலத்தில் அதிதீவிரமாக பரவுகிறது. கண்டிப்பு காட்டினால் அரசை திட்டுகிறோம். பரவல் கூடினாலும் திறமையற்ற அரசு என்று இந்த அரசை நாம் திட்டுகிறோம். நடந்ததை நினைத்து நாம் அரசை விமர்சிக்கிறோம். இனிமேல் என்ன செய்யக்கூடாது என்றும் இந்த அரசிடம் எதிர்பார்க்கிறோம். நாம் மட்டும் மாறாமல் இப்படியே ஊர் நியாயம் பேசியபடி இருந்தால் எத்தனை ஊரடங்கு போட்டாலும் போதாது.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
19-ஏப்-202114:39:21 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN எதிர் கட்சிகள் தான் ஊரடங்கு கூடாது என்றனர். அப்புறம் முழு ஊரடங்கு கூடாது என்றனர். இப்போது என்னடா என்றால் இவர்கள் தான் முழு ஊரடங்கு அறிவிக்கிறார்கள். இதை தான் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்கிறார்களோ. நல்ல எண்ணமும் இல்லை. கண்மூடித்தனமாக குறைகளை கூறுவது கண்மூடித்தனமாக நாட்டை ஏலம் போடுவது. நமது நாட்டை நாமே குறைசொல்வது. மக்கள் மேல் அக்கறை இல்லாத அரசியல் வாதிகள். தமிழ் நாட்டில் இரவு ஊரடங்கு அறிவித்து உள்ளனர். இன்னும் நமது பொது நல விரும்பிகள் என்று சொல்லிக்கொள்வோர் ஊரடங்கை எதிர்த்து பொதுநல வழக்கு ஏதும் போடவில்லை ஆச்சரியமாக உள்ளது. உடனே யாராவது போட்டால் தானே நமது மாண்புமிகு நீதிபதிகள் அரசிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அப்போது தானே நேரம் கடத்த தெரியாத செய்தி டிவி சேனல்கள் தாங்கள் ஏதோ புதிதாக கண்டு பிடித்தது போல் ஒரு டொய் டொய் மியூசிக் போட்டு மக்களை பரபரப்பாக வைத்து கொள்ள முடியும். வழக்கு இல்லாத வக்கீல் யாராவது உண்டா?
Rate this:
Cancel
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-202113:45:08 IST Report Abuse
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) அங்கே போராட்டம் செய்யும் போலி விவசாயி கூட்டத்தை வீட்டிற்கு போக சொல்லுவாரா கெஜ்ரி ??? இல்ல பிரியாணி போட்டு ஸ்பெஷல் கவனிப்பாரா
Rate this:
19-ஏப்-202119:11:38 IST Report Abuse
chandran, pudhucherry பஞ்சாப்ல இருந்து வந்து டெல்லியில உக்காந்துகிட்டிருக்கானுங்க. ஏன்டா இங்க வந்து இடஞ்சல் பண்றீங்கனு கெஜ்ரிதான கேட்கனும். பக்கத்து தெருவில பிரச்சினைக்கு உங்க வீட்டு முன்னாடி போராட்டம் பண்ணா இல்ல அடிச்சிகிட்டா நீங்க சந்தோசமா வேடிக்கை பாப்பீங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X