இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (7+ 4)
Share
Advertisement
லண்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்துள்ளார்.பிரிட்டன் பிரதமராக 2019-ல் போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். அவர் பிரதமரான பின்னர் முதல் முக்கிய பயணமாக இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர இருந்தார். அச்சமயத்தில் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் துவங்கியதால் கடைசி
Boris Johnson, India Visit, Cancelled, COVID-19, BritainPM, போரிஸ் ஜான்சன், இந்தியா, பயணம், ரத்து, கொரோனா, பிரிட்டன் பிரதமர்

லண்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக 2019-ல் போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். அவர் பிரதமரான பின்னர் முதல் முக்கிய பயணமாக இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர இருந்தார். அச்சமயத்தில் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் துவங்கியதால் கடைசி நேரத்தில் அப்பயணத்தை ரத்து செய்தார். அப்பயணம் இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏப்., 26 முதல் நான்கு நாட்கள் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம் வகுக்கப்பட்டது.


latest tamil news



இந்தியாவில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவுவதால் ஏப்., 26 அன்று ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்களை வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஸ்டீவ் ரீட் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், போரிஸ் ஜான்சினின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-202102:36:45 IST Report Abuse
ஆப்பு நல்ல வேளை. இவரு வந்தா, தணுஷ்கோடியை சுத்தி சுவர் எடுத்து அதையே ரிசார்ட்டாக மாத்தி, குத்தாட்டம் போட்டிருபாங்க. அந்த தனுஷ்கோடி கோதண்டராமர்தான் காப்பாத்துனாரு. ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஏப்-202122:13:25 IST Report Abuse
Ramesh Sargam இது இரண்டாவது முறை இவறின் இந்தியா பயணம் தடைபடுகிறது. காரணம்: இந்தியாவில் அதிக அளவு கொரானா தாக்குதல். ஒருவிதத்தில் இந்தியாவுக்கு அவப்பெயர் - இந்தியா கொரானா தாக்குதலை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று. இந்திய அரசு மேலும் தீவிரத்துடன் ஒரு சில நடவடிக்கைளை மேட்கொண்டு, இந்த கொரானா மேலும் பரவாமல் தடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
19-ஏப்-202119:15:52 IST Report Abuse
bal இவனும் வராமல் இருப்பது நமக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X