காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் கொரோனா
HarshVardhan, Replies, ManmohanSingh, Letter, மன்மோகன் சிங், பிரதமர், மோடி, கடிதம், ஹர்ஷ்வர்தன், மத்திய அமைச்சர்

புதுடில்லி: தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (ஏப்.,18) கடிதம் எழுதியிருந்தார். தற்போது இந்தக் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலடி கடிதம் எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போட்டியிட முக்கிய ஆயுதமாக தடுப்பூசிகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை உணர்ந்ததால் தான் மத்திய அரசு உலகிலேயே மாபெரும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது.


latest tamil news


இந்தியாவில் 12 கோடி டோஸ்கள் போடப்பட்டு சாதனை படைத்திருக்கிறோம். நீங்கள் சொல்லும் அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். ஆனால் சோகம் என்னவென்றால் உங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. ஒருவேளை அவர்களுக்காக தான் ஆலோசனை வழங்கியிருக்கிறீர்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன்.


latest tamil news


குறிப்பாக, உங்கள் கட்சி மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் திரைமறைவில் சத்தமின்றி அவர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் (காங்.,) ஆளும் மாநிலங்களில் தான் கொரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் பதிவாகின்றன. நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை உங்கள் கட்சித் தலைவர்கள் பின்பற்றினால் வரலாறு அவர்களுக்கு நன்றி சொல்லும். இவ்வாறு பதிலடி தரும் வகையில் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19-ஏப்-202122:46:10 IST Report Abuse
Anbuselvan எந்த நேரத்தில் அவர் பிரதமருக்கு அறிவுரை கூறினாரோ, அவருக்கே கொரோனா வந்து விட்டது பாவம். அவர் கொரானாவிலிருந்து மீண்டு வர ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-202122:07:38 IST Report Abuse
Krishna MARANA ADI INDHA ADIMAI BOMMAI MANNU MOHAN SINGUKKU.IPPO MATTUM IVAR PM AAGA IRUNDHAAL NINAITHAALE KULAI NADUNGUDHU.ITALIAN MAFIA RANI TIHAR BAYILVAAN PASI AALOJANAI PADI LATCHAM KODIGALIL CORONA FUND AATAYA POTTU MAKKAL KOTHU KOTHAAGA SAAGUM KAATCHI ARANGERI IRUKKUM.ENDHA MOONJIYA VECHUKITTU INDHA ADIMAI BOMNAI KADIDHAM EZHUDHUGIRADHU.VEKKA KEDU.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
19-ஏப்-202121:42:38 IST Report Abuse
Visu Iyer காக்கா நிறம் வெள்ளை என்றால் "ஆமாம்" என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானே.. இல்லை என்றால் நமக்கு கண் தெரியாது என்று சொல்லுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X