மரணத்தின் மடியில் குழந்தை : நொடியில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (67) | |
Advertisement
மும்பை : மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாது ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாங்கனி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண், தனது குழந்தையுடன் நடந்து சென்றார். எதிர்பாராத விதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அந்த சமயம்
Mayurshelke, Railway, Indianrailway,

மும்பை : மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாது ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாங்கனி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண், தனது குழந்தையுடன் நடந்து சென்றார். எதிர்பாராத விதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அந்த சமயம் எக்ஸ்பிரஸ் ஒயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அந்த தாய் பதறிய நிலையில் அங்கு ரயில்வே பணியில் இருந்த ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் ஓடி வந்து, தன் உயிரையும் பொருட்படுத்தாது நொடிப்பொழுதில் அந்த குழந்தையையும் காப்பாற்றி, அவரும் உயிர் பிழைத்தார்.


இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. மயூர் ஷெல்கேவின் இந்த தைரியத்தை ரயில்வே அமைச்சார் பியூஸ் கோயல் டுவிட்டரில் பாராட்டி உள்ளார். குழந்தையை காப்பாற்றிய #Mayurshelke என்ற பெயரிலுயம், #Railway என்ற பெயரிலும் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவை பலரும் புகழ்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news

* சினிமாவில் தான் சூப்பர் மேன்களை பார்த்துள்ளோம். இப்போது நேரில் ஒரு சூப்பர் மேனை பார்த்துள்ளேன் என பாராட்டி வருகின்றனர்.* தன் உயிரையும் பொருட்படுத்தால் குழந்தையை காப்பாற்றிய இவர் தான் உண்மையான ஹீரோ. இவர் போன்றவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.* இதுபோன்ற காட்சிகளை சினிமாவில் தான் பார்த்துள்ளோம். சல்யூட் மயூர் ஜி.* என்ன ஒரு மீட்பு. தன்னலமற்ற மனிதன், குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைக்கிறார். மயூர் ஷெல்கேவின் வீரத்திற்கும், தைரியத்திற்கும் பாராட்டுகள்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
21-ஏப்-202107:35:30 IST Report Abuse
shyamnats இரண்டு விஷயங்கள் இங்கு உறுத்துகின்றன . ஒன்று அந்த தாய் குழந்தையை ஆபத்துடைய ரயில்வே லைன் பக்கமாக அழைத்து சென்றிருக்க கூடாது. மற்றொன்று, அந்த தாய்க்கு கண்குறைபாடு என்று இருந்திருக்குமானால் தகுந்த துணையில்லாமல் பயணித்தது . பார்வை குறைபாடு அவருக்கும், கூட இருந்தவருக்கும் தன உயிரை பணயம் வாய்த்த நல்ல உள்ளத்துக்கும் ஆபத்தை உண்டாக்கி விட்டது.
Rate this:
Cancel
subhas - vaaravi,இந்தியா
20-ஏப்-202110:14:02 IST Report Abuse
subhas அன்புள்ள நண்பா உங்களின் தைரியத்துக்கும் மனிதநேயத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இவருக்கு உணமையான ஹீரோ என்று பாராட்டி அரசு கௌவ்ரவிக்க வேணும்.
Rate this:
mohan - chennai,இந்தியா
20-ஏப்-202117:20:00 IST Report Abuse
mohanஅன்பே சிவம் யார் யார் சிவம் ? அன்பே சிவம்...
Rate this:
Cancel
john - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-202109:44:15 IST Report Abuse
john வாழ்த்துக்கள் நண்பா கொடிய மிருக குணம் உள்ள மனிதர்களின் மத்தியில் உன்னை போன்றோரை பார்க்கும் போது உள்ளத்தில் ஓர் பேரானந்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X