பீஹாரில் சுகாதார ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு
NitishKumar, SalaryBonus, Bihar, பீஹார், சுகாதார பணியாளர்கள், சம்பளம், போனஸ், நிதிஷ்குமார்

பாட்னா: பீஹாரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பீஹார் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பீஹாரில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


latest tamil news



மேலும், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்பது தான். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும் பீஹாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
20-ஏப்-202105:35:01 IST Report Abuse
M  Ramachandran இது தமிழ் நாட்டு மாடலாக தெரிகிறது. நிதீஷ் கூட இப்படி ஆரம்பிக்கும் படி ஆகி விட்டது காலத்தின் கோலம்.
Rate this:
Cancel
19-ஏப்-202120:10:25 IST Report Abuse
chandran, pudhucherry வாழிய நீவிர் பல்லாண்டு
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
19-ஏப்-202119:15:15 IST Report Abuse
s vinayak நமது தமிழக அரசு தாயுள்ளத்தோடு தமிழ் நாட்டில் அரசு பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் நீண்ட நாள் நியாயமான கோரிக்கைகள் இருந்தால் ( பதவி உயர்வு, சம்பள மாறுபாடு, மூப்பு அடிப்படை....) உடனே நிரந்தர தீர்வு காண வேண்டும்.மீண்டும் அவர்கள் வீதியில் வந்து போராட வைக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X