கொரோனா 2வது அலைக்கு பிரதமர் மோடியே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
கோல்கட்டா: கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதற்கு பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய 3
WestBengalElections, PMModiResponsible, SecondWave, Mamata, Covid-19, மேற்குவங்கம், தேர்தல், முதல்வர், மம்தா, பிரதமர், மோடி, கொரோனா, இரண்டாவது அலை,

கோல்கட்டா: கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதற்கு பிரதமர் மோடியின் அலட்சியமே காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய 3 கட்டத் தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாதது ஏன்? இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.


latest tamil news


கொரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு பிரதமர் மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது இரண்டாம் முறையாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டிருக்காது. எஞ்சிய 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் அல்லது 2 நாட்களில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். பா.ஜ., சொல்வதன் அடிப்படையில் உங்கள் முடிவை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-202118:46:18 IST Report Abuse
பேசும் தமிழன் என்ன தீதீ... புதுசா கதை சொல்லுறீங்க.... நீங்கள் போலியாக கால் கட்டு போட்டு... ஊர் ஊராக சுற்றும் போது பரவாத கொரொனா... மோடி மூலம் பரவியதா???
Rate this:
Cancel
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-202117:32:08 IST Report Abuse
Manithan மோடியின் மெத்தன செயல்கள் ஒரு காரணம்...என்ன செய்ய போகிறார்?
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
20-ஏப்-202111:43:22 IST Report Abuse
S.PALANISAMY மம்தா சொல்வது உண்மைதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X