நவால்னி கைது விவகாரம்; ரஷ்ய பண மதிப்பு சரிவு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மாஸ்கோ: ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க அரசு கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதன்காரணமாக ரூபில் பண மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்துள்ளது.ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரபல ஊடகவியலாளர் அலெக்ஸி நவால்னி. தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் அவருக்கு உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது.
Alexey Navalny, Opposition Leader, Russia, HungerStrike, Ruble, அலெக்ஸி நவால்னி, ரஷ்யா, எதிர்க்கட்சித் தலைவர், கைது, உண்ணாவிரதம், ரூபில், பணம், மதிப்பு, சரிவு, பங்குச்சந்தை

மாஸ்கோ: ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க அரசு கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதன்காரணமாக ரூபில் பண மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்துள்ளது.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரபல ஊடகவியலாளர் அலெக்ஸி நவால்னி. தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் அவருக்கு உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது. முன்னதாக இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவில் விளாடிமிர் புடின் அரசின் ஊழல் குறித்துப் பேசி தொடர்ந்து எதிர்த்து வருபவர் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. அவ்வப்போது இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அரசு அனுமதியுடன் ஊழலுக்கு எதிராக பெரும் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி வந்தார். இவர் தற்போது விளாடிமிர் புடின் அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


இவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ரஷ்ய நீதிமன்றம். இதற்கு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 10 நாட்களாக அலெக்ஸி நவால்னி சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து அவரது உடல் எடை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. அவருக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் இதய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியானது. சிறை நிர்வாகிகள் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவை ஊட்ட முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.


latest tamil news


இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து இருந்தார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரபல சட்ட வல்லுநர், ஊடகவியலாளர் அலெக்ஸி நவால்னிக்கு நேர்ந்து இருப்பது மிகவும் கொடுமையான மற்றும் நியாயமற்ற நிலை என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க அரசு கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இதன்காரணமாக ரூபில் பண மதிப்பு பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-ஏப்-202111:40:28 IST Report Abuse
Dr. Suriya கிரீட்டா ... தீஷா போன்றவர்கள் குரல் கொடுப்பார்களா?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஏப்-202113:44:27 IST Report Abuse
தமிழவேல் அவர்களது சப்ஜெக்ட் அல்ல. மியான்மருக்கு (படுகொலைகளுக்கு) கொடுத்தார்கள் ஆனால், நாம கொடுக்கல....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-ஏப்-202114:00:45 IST Report Abuse
Dr. Suriyaஎன்ன இந்தியாவோ மியான்மரோ இல்லை....ரசியா....குரல் கொடுத்தால் ல் போட்டு தள்ளி விடுவார்கள் என்ற உயிர் பயம் தான் ....தனிமனிதராய் குரல் கொடுப்பதற்கும் அரசாங்கமாக குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கு தமிழ்.......
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஏப்-202101:05:24 IST Report Abuse
தமிழவேல் திருந்த மாட்டானுவோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X