பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11ஆயிரத்தை நெருங்கியது

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.19) 11 ஆயிரத்தை நெருங்கியது.ஒரே நாளில் கொரோனா பாதித்த 6,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.14 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,19) 10,941 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.19) 11 ஆயிரத்தை நெருங்கியது.ஒரே நாளில் கொரோனா பாதித்த 6,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.14 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,19) 10,941 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,02,392 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 263 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-194) மூலமாக, இன்று மட்டும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 590 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 12 லட்சத்து 99 ஆயிரத்து 220 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 6,572 பேர் ஆண்கள், 4,369 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,05,147 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,97,209 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 6,172 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 119 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 44 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும் 22 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,157 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
20-ஏப்-202108:51:49 IST Report Abuse
MURUGESAN கொரோனாவை பரப்பிய சீனா இப்போது எப்படி உள்ளது?
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
20-ஏப்-202108:13:45 IST Report Abuse
amuthan மே இரண்டு வரை இப்படித்தான் இருக்கும். அப்புறம் என்ன மாயமோ மாத்திரமோ தெரியாது எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
19-ஏப்-202121:17:39 IST Report Abuse
SUBBU இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையாக பேசிய மன்சூர் அலிகான் மேல் வழக்குபதிவு: கொரோனா அனைத்து நாடுகளிலும் பெருகி ஒரு தடுப்பு ஊசிக்கு 1000 டாலர் என்ற அளவிலும் கிடைக்காத நாடுகள் உலகில் பல உண்டு.அங்கு இந்த மன்சூரை சிலமாதம் தங்கி தண்டனை பெற அனுப்பலாம்.மன்சூர் போன்றவர்களுக்கு அம்மாதிரி நாடுகள்தான் சரி.அவ்வளவு ஏன்? அமெரிக்கப் படைகள் வெளியேறும் ஆப்கனுக்கு கூட இந்திய அரசின் சார்பாக அனுப்பலாம்.பாரதம் என்றால் என்ன என அவருக்கு அப்பொழுதுதான் தெரியும்.விவேக் உடலை வைத்தே அதுவும் மாரடைப்பால் இறந்த ஒருவரை வைத்தே என்னவெல்லாமோ பேசும் சரக்கு மிடுக்கு திருமா,தமிழக மக்கள் கண்ணால் பார்க்காத ஈழத்தை வைத்து என்னவெல்லாம் பேசியிருப்பார்? அவரெல்லாம் ஒரு மக்களவை எம்பி என்பதுதான் தமிழகத்தின் மிகபெரிய சோகம்.அவரைச் சொல்லி குற்றமில்லை?அவருக்கு வோட்டுப் போட்ட மக்களைத்தான் நாம் நொந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X