தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு: தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், அம்மாநில அரசுக்கு கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால், தமிழகம், கர்நாடகா , உ.பி., டில்லி, கேரளா ராஜ்ஸ்தான், பஞ்சாப், குஜராத் பல்வேறு மாநிலங்களில் கடும்
 Telangana High Court hits out at State over response to pleas on COVID-19 situationஅதிகரிக்கும் தொற்று பரவலை தடுக்க  முழு ஊரடங்கு: தெலுங்கானா , உயர்நீதிமன்றம் 24 மணி நேரம்,

ஐதராபாத்: தெலுங்கானாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், அம்மாநில அரசுக்கு கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால், தமிழகம், கர்நாடகா , உ.பி., டில்லி, கேரளா ராஜ்ஸ்தான், பஞ்சாப், குஜராத் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.


latest tamil newsஇந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.தொற்று பரவலை தடுக்கவும், மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஹேமோ கோஹ்லி தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு

தொற்று பரவல் வேகமெடுத்து வருவது உறுதியாகியுள்ளதால், இதனை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும், அமல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் , மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் குறித்த விவரத்தை சமர்பிக்க அரசு சமர்பிக்க வேண்டும்.

மேலும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றமே உத்தரவிட நேரிடும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
20-ஏப்-202112:50:34 IST Report Abuse
ponssasi அத்தியாவசிய பணிகள் தவிர மீதம் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், அரசு அலுவலகங்கள் 50% வங்கிகள் 50% விவசாய பணிகள் 100% கடைகள் காலை 12. மணிவரை திறக்கலாம், அத்தியவசிய பொருட்கள் தடை இன்றி கிடைக்கவேண்டும், அரசியல் தலைவர்கள் உதவிசெய்கிறேன் என்று மக்களை கூட்டி பொருட்கள் வழங்க கூடாது, உதவும் எண்ணம் உள்ள உள்ளங்கள் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பொருளாக அல்லது பணமாக கொடுக்கலாம், மக்கள் அதிகம் ஓர் இடத்தில கூட அனுமதிக்க கூடாது, சுகாதார பணியாளர் மூலம் வீடு வீடாக காய்ச்சல், மற்றும் தடுப்பூசி அவசியம் செலுத்தப்படவேண்டும். இது மூன்று மாதங்கள் மிகவும் கட்டுப்பாடுடன் நடக்கவேண்டும்,
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202109:27:41 IST Report Abuse
g.s,rajan மக்கள் ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால்,வேலை இழப்பால் ,தொழில் நசிவினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நித்தம் வாழ்க்கை நடத்த படாத பாடு படுகின்றனர் .ஏற்கனவே கொரோனா பாதிப்பால் நாடு சீரழிந்து உள்ளது.இந்தியாவில் இப்போது இருக்கும் பொருளாதார சரிவை ஈடு கட்ட இன்னும் பழைய படி நிலை வருவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவே பொது மக்களுக்கு பண உதவி மற்றும் பொருள் உதவி தேவையான அளவு செய்யுங்க ,ஓரளவு அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி பண்ணுங்க .அதுதான் தற்போது மோடிஜியின் பிஜேபி அரசு செய்ய வேண்டும் .விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும் அங்கே போகாதே இங்கே போகாதே வீட்டுக்குளேயே இரு என்று பொதுமக்களை அறிவுறுத்துவதால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை .வருமானத்துக்கு வழி செய்யுங்க ,தேவையான பொருள் அளித்து தகுந்த நெருக்கடியான நேரத்தில் முடிந்த அளவு உதவி செய்யுங்க அதுதான் இப்பொழுது மிக மிக அவசியம் வெறும் அட்வைஸ் யாருக்கு வேணும் .எனவே தூக்கிக் கடாசுங்க அட்வைஸை . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
20-ஏப்-202109:22:45 IST Report Abuse
Ganesh G ஜிடிபி, பொருளாதாரம் முக்கியமா, மக்களின் உயிர் முக்கியமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X