பொது செய்தி

இந்தியா

மன்மோகன் சிங், சந்திரசேகர ராவிற்கு கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தெலுங்கானா முதல்வருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் நாளுக்கு நாள்

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தெலுங்கானா முதல்வருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.



latest tamil news



கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குகிறது.


latest tamil news



இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அவர் டில்லியி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சந்திரசேகரராவிற்கு கொரோனா

இதற்கிடையே தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவிற்கு கொரோனா அறிகுறியுடன் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து தனிமைபடுத்திக்கொள்ளுமாறு டாக்டர்ள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


மன்மோன் நலம் பெற மோடி பிரார்த்தனை

மன்மோகன் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
20-ஏப்-202113:37:54 IST Report Abuse
mathimandhiri சிவனே என்றிருந்தவரை பிடித்து,, நரசிம்ம ராவ் நிதியமைச்சராக ஆக்கி,,ஆனால் முழு சுதந்திரம் கொடுத்து வைத் திருந்தார்////.அதுவாவது பரவாயில்லை. அவரது மென்மையான போக்கைக் கவனித்த மோசடி கும்பல் அவரை பிரதமராக உட்கார வைத்து எப்பப்படி சுரண்டலாமோ அப்படி எல்லாம் சுரண்டியது தான் வேதனை ///. தன் கண் முன்னே நாட்டையே உலுக்கிய ஊழல்கள் நடந்தும் தட்டிக் கேட்க திராணி அற்று கிடந்தார்////. உங்களுக்குத் தெரிந்து தானே செய்தேன் என்று ஒரே போடு போட்ட கூட்டணி கட்சி அமைச்சரிடம் பேச திராணியாற்றுப் போனார்""கூட்டணி தர்ம""த்துக்காக.//// தான் கையெழுத்திட்ட மசோதாவை ஒருவர் நாடாளுமன்றத்திலேயே கிழித்து முகத்துக்கு நேரே வீசியதை மௌனமாக ஜீரணித்துக் கொண்டார்தலைமைக்குத் தலை வணங்கும் கட்சி காரராக.//// இந்திய வரலாற்றிலேயே மிக அதிக பட்ச ஊழலைக் தனது பதவிக்கு காலத்தில் கண்ணுற்ற, செயலற்ற பிரதமர் என்ற பெருமைக்குரியவர்////. விரைவில் குணமடையட்டும்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
20-ஏப்-202113:21:06 IST Report Abuse
mathimandhiri அவர் paattukk
Rate this:
Cancel
Kris Siva - Hong Kong,சீனா
20-ஏப்-202110:12:34 IST Report Abuse
Kris Siva விரைவில் குணம் அடைய பிராத்தனை செய்கிறோம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X