சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 19, 2021
Share
Advertisement
'ரொம்ப சரி... ஒரு எழுத்தாளர்ங்கிற முறையில, தேர்தலப்ப நடந்த பிரசாரங்களை நிறுத்துமாறு, சமயோசிதமா, ரொம்ப அட்வான்சா சொல்லி இருக்க வேண்டாமா... கொரோனா இவ்வளவு அதிகமா பரவினதுக்கு அது தானே காரணம்... அரசியல் கட்சியில சேர்ந்ததுனால, நீங்களும் அரசியல்வாதி மாதிரியே சந்தர்ப்பவாதியாகிட்டீங்களே... ரொம்ப வருத்தமா இருக்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ரொம்ப சரி... ஒரு எழுத்தாளர்ங்கிற முறையில, தேர்தலப்ப நடந்த பிரசாரங்களை நிறுத்துமாறு, சமயோசிதமா, ரொம்ப அட்வான்சா சொல்லி இருக்க வேண்டாமா... கொரோனா இவ்வளவு அதிகமா பரவினதுக்கு அது தானே காரணம்... அரசியல் கட்சியில சேர்ந்ததுனால, நீங்களும் அரசியல்வாதி மாதிரியே சந்தர்ப்பவாதியாகிட்டீங்களே... ரொம்ப வருத்தமா இருக்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் அறிக்கை: தடுப்பூசி பற்றாக்குறை, தொற்று பரவும் வேகம் எனத் தற்போதைய நிலை நீடித்தால், ஏப்ரல் இறுதிக்குள் தமிழ்நாடு, குஜராத், உ.பி., நிலைமைக்கு செல்லக்கூடும். தமிழக அரசியல் தலைவர்கள், ராகுலை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தாலென்ன!


'அதாவது, 30 லட்சம் மரம் நட்டாருங்கிற, 'கிரெடிட்'டை கூட, விவேக்குக்காக விட்டுத் தராமல், 'நான் தான் மரம் நட்டேன்'னு சொல்ல வர்றீங்க... அப்படித் தானே...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
சில ஆண்டுகளுக்கு முன், இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில், நான் மரக்கன்றுகள் நட்ட போது, அதை வாழ்த்தினார் நடிகர் விவேக். சுற்றுச்சூழலில் ஆர்வம் மிக்கவர் அவர் என்பதற்கு அதுவே நல்ல உதாரணம்.


'மம்தா கூட்டின கூட்டக்காரங்களுக்கு கொரோனாவே வராதா... உங்களைப் போன்ற அறிவாளிகள் இருக்கிற கட்சியாச்சே...' என கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை:
மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் கூடிய பிரமாண்ட கூட்டத்தைப் பார்த்து, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் இவ்வாறு செய்வது, அறிவாளிகள் செய்யக் கூடிய செயலா?


'நாடு முன்னேறவே கூடாதுன்னு, போராட்டம் நடத்துற கட்சிக்காரரா இப்படி பேசுறது... ஆச்சரியமா இருக்கு...' எனக் கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: குஜராத்தில் பொது சுகாதார கட்டமைப்பு படுமோசமாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 'குஜராத் மாடல்' அதானி, அம்பானிகளுக்கானதே தவிர, ஏழைகளுக்கானது அல்ல என்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது. அந்த மாடலை உருவாக்கியவரிடம் தான் நாடு சிக்கியுள்ளது.


'வாயால வடை சுடுவது... அதாவது, அறிக்கை விடுவது, எல்லாருக்கும் எளிது தானே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை:
டில்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் கொரோனா படுக்கைகள் நிரம்பி வழிகின்றன; ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது; 'ரெம்டெசிவிர்' மருந்து கிடைக்காத நிலை காணப்படுகிறது என, அந்தந்த மாநில முதல்வர்களே கூறுகின்றனர். ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இதெல்லாம் பொய் என்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X