இதே நாளில் அன்று

Added : ஏப் 19, 2021
Share
Advertisement
ஏப்., 20, 1939இலங்கை, திரிகோணமலையில், 1939 ஏப்., 20-ல் பிறந்தவர், தர்மு சிவராம். பிரமிள் என்றுஅழைக்கப்பட்டார். 1960-களின் இறுதியில், இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தார். சி.சு.செல்லப்பா நடத்தி வந்த, 'எழுத்து' பத்திரிகையில், தன், 20-வது வயதில் எழுதத் துவங்கினார். 'பானுசந்திரன், தர்மு சிவராம், தர்மு அரூப் சிவராம்' உட்பட, பல்வேறு புனைப் பெயர்களில் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து

இதே நாளில் அன்று


ஏப்., 20, 1939



இலங்கை, திரிகோணமலையில், 1939 ஏப்., 20-ல் பிறந்தவர், தர்மு சிவராம். பிரமிள் என்றுஅழைக்கப்பட்டார். 1960-களின் இறுதியில், இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தார். சி.சு.செல்லப்பா நடத்தி வந்த, 'எழுத்து' பத்திரிகையில், தன், 20-வது வயதில் எழுதத் துவங்கினார். 'பானுசந்திரன், தர்மு சிவராம், தர்மு அரூப் சிவராம்' உட்பட, பல்வேறு புனைப் பெயர்களில் எழுதினார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நிறைய படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலக் கவிதை மற்றும் விமர்சனக் கவிதைகளை தவிர்த்து, 131 கவிதைகளை
மட்டுமே, பிரமிள் எழுதியிருக்கிறார் என்றாலும், நவீனத் தமிழ்க் கவிதையில் மிக முக்கியமான கவிஞராக கருதப்படுகிறார். கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என, பன்முகம் கொண்டிருந்தார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1997 ஜன., 6ம் தேதி, தன், 58வது வயதில் காலமானார்.எழுத்தாளர் பிரமிள் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X