ஏழைகளுக்கு எதற்கு சமூக இடைவெளி?

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தலையில் மிகப்பெரிய துணி மூட்டையை ஒரு கை பிடித்துக் கொண்டு இருக்கிறது, ,இன்னோரு கை சின்ன பெண் குழந்தையை இறுகப்பிடித்துக் கொண்டு இருக்கிறது, மற்றொரு வளர்ந்த பெண் குழந்தை அந்த தகப்பனின் கையை விடாமல் பிடித்தபடி நடக்கிறது முன்னால் நடக்கும் கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பெண் ஒருவர் விசுக் விசுக்கென்று நடக்கிறார், கையில் இருக்கும் கைக்குழந்தையை சமாதானம்latest tamil news


தலையில் மிகப்பெரிய துணி மூட்டையை ஒரு கை பிடித்துக் கொண்டு இருக்கிறது, ,இன்னோரு கை சின்ன பெண் குழந்தையை இறுகப்பிடித்துக் கொண்டு இருக்கிறது, மற்றொரு வளர்ந்த பெண் குழந்தை அந்த தகப்பனின் கையை விடாமல் பிடித்தபடி நடக்கிறது முன்னால் நடக்கும் கணவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பெண் ஒருவர் விசுக் விசுக்கென்று நடக்கிறார், கையில் இருக்கும் கைக்குழந்தையை சமாதானம் படுத்த முடியவில்லை போலும் வீறிட்டு அழுகிறது காரணம் பெண்ணின் தோளிலும் கைகளிலும் தொங்கும் சுமையாக இருக்கலாம்


latest tamil news
இந்த குடும்பம் தங்களுக்கான பஸ்சை தேடி அலைகிறது


latest tamil news


Advertisement

இதே போல பசிக்கு அழும் குழந்தையை சமாதானப்படுத்த முடியாத பெற்றோர் உணவையும் பஸ்சையும் தேடி ஒரு சேர அலைகின்றனர் கடந்த ஊரடங்கின் அவலத்தை அங்கே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கண்முன் கொண்டு வந்தனர்.


latest tamil news


இன்று திடீரென ஊரடங்கு அறிவித்த டில்லியில்தான் இந்த காட்சி.


latest tamil news


டில்லி,மகராஷ்ட்ரா,பெங்களூரு.உ.பி.,தமிழ்நாடு உள்பட நாட்டின் ஒட்டு மொத்த மாநிலங்களையும் கொரோனா இரண்டாம் அலை சூறையாடி வருகிறது.தடுப்பூசி தட்டுப்பாடு,ஆக்சிஸன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காதது என்று கொரோனா நோயாளிகள் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர் இந்த சூழ்நிலை சமாளிக்க முடியாமல் மாநில அரசுகளும் திணறிவருகின்றன.


latest tamil news


முககவசம்,சமூக இடைவெளி,தடுப்பூசி என்ற எல்லா முன்தடுப்பு நடவடிக்கைகளையும் தாண்டி கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து கடைசியாக உள்ள ஓரே ஆயுதமான ஊரடங்கை கையில் எடுக்க மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.
மகாராஷ்ட்ரா மாநில அரசைத் தொடர்ந்து டில்லியும் தற்போது ஊரடங்கை அறிவித்துள்ளது.எனக்கு ஊரடங்கின் மீது நம்பிக்கை நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டே முதல்வர் கெஜ்ரிவால் ஊரடங்கை அறிவித்துள்ளார் ஆனால் இந்த ஊரடங்கு ஒரு வாரத்திற்கு மட்டுமே என்று சொல்லியுள்ளார்.
ஊரடங்கை கொண்டுவரமாட்டேன் என்று சொல்லிவிட்டு ஊரடங்கை கொண்டு வந்தவர்,‛ ஒரு வாரம் மட்டுமே' என்று சொல்லிவிட்டு நீடிக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்? என்று, முடிவெடுத்த மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்களது ஊர்களுக்கு கிடைத்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே ஆறுதல் பஸ்சும் ரயிலும் இயங்குகின்றன என்பதுதான் ஆனால் அதில் புளிமூட்டையைப் போல மக்களை அடைத்து செல்கின்றனர். எழை எளியவர்களைப் பிறந்தவர்களுக்கு சமூக இடைவெளி ஒரு கேடா? என்பது போலத்தான் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கின்றன.
ஊரடங்கு வருவதற்கு முன்பாக குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது அவகாசம் தந்தால் மக்கள் தத்தம் ஊர்களுக்கு பத்திரமாக போய்ச் சேருவார்கள் அவர்கள் ஊர் போய்சேரும் வரை ரயில் பஸ்களில் கட்டணம் கிடையாது முதியவர்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சி தலைவர்கள் தங்களது கார்களை கொடுத்து உதவலாம் தொண்டர்கள் வழிகாட்டலாம்.இதை எல்லாம் இந்த நேரம்தான் செய்ய வேண்டும் இதுதான் உண்மையான மக்கள் சேவை அதை விடுத்து அவரச கதியில் ஊரடங்கை அறவிப்பது என்பது மக்களின் வாழ்க்கையில் விளையாடுவது போலத்தான்.
வாகனம் கிடைக்காத மக்களை செருப்பு தேய நடக்கவிடாமல் இருந்தால் சரி
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
21-ஏப்-202109:09:30 IST Report Abuse
venkata achacharri கீழ் தர நடுத்தர மக்களின் கஷடங்களை புரிந்துகொள்ளாத ஜனநாயகம்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
19-ஏப்-202122:34:44 IST Report Abuse
Visu Iyer அதெல்லாம் சரி.. வவ்வால் மூலம் வந்ததாக சொன்ன இந்த கொரானா வைரஸ்.. இப்போ அந்த வவ்வால் நினைவில் இருக்கிறதா.. அங்கிருந்து இப்போ திசை மாறிவிட்டதா.. வவ்வால் பறந்து விட்டதா என்று சிந்திக்க தோன்றவில்லையா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X