ஒப்புகை சீட்டுகளை ஒப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி :'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள், வி.வி.பி.ஏ.டி., எனப்படும், வாக்காளர்கள் ஒப்புகை சீட்டுடன், 100 சதவீதம் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும்' என கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 'தேர்தல் நடைமுறைகளுக்கு இடையே, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும்
ஒப்புகை சீட்டுகள், மனு தள்ளுபடி ,தலையிட, மறுப்பு

புதுடில்லி :'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள், வி.வி.பி.ஏ.டி., எனப்படும், வாக்காளர்கள் ஒப்புகை சீட்டுடன், 100 சதவீதம் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும்' என கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

'தேர்தல் நடைமுறைகளுக்கு இடையே, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, கடந்த மாதம், 27ல் துவங்கி, வரும், 29 வரை, சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன.மேற்கு வங்கத்தை தவிர, மற்ற மாநில தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. மேற்கு வங்கத்துக்கு மட்டும், மூன்று கட்ட ஓட்டுப்பதிவு மீதம் உள்ளது. ஓட்டுகள், அடுத்த மாதம், 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்காளர் ஓட்டளித்ததும், அதன் அருகே உள்ள, வி.வி.பி.ஏ.டி., எனப்படும், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் திரையில், அக்கட்சியின் சின்னம் சில நொடிகள் ஒளிரும்.




உறுதி செய்யும் வசதி



அதன் வாயிலாக, எந்த கட்சிக்கு தங்கள் ஓட்டு சென்று சேர்ந்தது என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.ஓட்டு எண்ணிக்கையின் போது, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன், வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் ஒப்பிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, பல்வேறு கட்சிகளும் வைத்து வருகின்றன. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறும் தொகுதியிலாவது, இந்த ஒப்பீடு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் வரை, ஒரு சட்டசபை தொகுதியில், ஏதாவது ஒரு ஓட்டுச் சாவடியை தேர்ந்தெடுத்து, அங்கு மட்டும் ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஓட்டுகள் ஒப்பிட்டு சரி பார்க்கப்படும் நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றி வந்தது.கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அதன் விபரம்:மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிடும் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை, தேர்தல் ஆணையம் அதிகரிக்க வேண்டும்.



நடைமுறை



லோக்சபா தேர்தல்களின் போது, ஒரு சட்டசபை தொகுதியில், ஐந்து ஓட்டுசாவடிகளில் இந்த ஒப்பீடு நடைமுறை செய்யப்பட வேண்டும்.இதன் வாயிலாக, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்குமே திருப்தி ஏற்படும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டது.இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள், ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன், 100 சதவீதம் ஒத்துப்போவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவிடக் கோரி, கோபால் சேத் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 'தேர்தல் பணிகள் நடைமுறையில் இருக்கும் போது, இடையில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
20-ஏப்-202112:17:35 IST Report Abuse
Nellai tamilan தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை யாரும் கண்டைனர் லாரியை பயன்படுத்த கூடாது என்று அடுத்த வழக்கு வந்தாலும் அதிசயம் இல்லை.
Rate this:
Cancel
POORMAN - ERODE,இந்தியா
20-ஏப்-202108:50:31 IST Report Abuse
POORMAN உச்ச நீதி மன்றம் நடந்து கொள்வதை பார்த்தால் பிஜெபியை இனி யாரும் ஆட்டோ அசைக்கவோ முடியாது போல. இந்த அளவுக்கு ஜனநாயகத்தை காக்கும் நடவடிக்கைகளிருந்து பின் வாங்குவது நாட்டுக்கு பேராபத்து.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202108:49:41 IST Report Abuse
g.s,rajan ஒட்டு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒப்புகை சீட்டுக்களை ஒப்பிட்டு சரி பார்க்கும் போக்கு அந்த எண்ணிக்கையை ஒப்பிட்டு ஊர்ஜிதம் செய்யும் செயல் சரியல்ல அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இது தெரிந்த விஷயம் தானே அப்போ இனிமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அரசியல்வாதிகள் சும்மா புகுந்து விளையாடலாம் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் கருத்து அமைந்துள்ளது நமது இந்தியாவில் எப்பவும் அரசியல்வாதிகளின் காட்டில் மழை தான் போங்க ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X