பொது செய்தி

இந்தியா

அரை மணி நேரத்தில் ரூ.5.27 லட்சம் கோடி இழப்பு

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை :கொரோனா தொற்று பாதிப்பு, பங்குச் சந்தைகளையும் பதம் பார்த்துவிட்டது. தொற்று அதிகரித்ததை அடுத்து, நேற்று பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன. சந்தை துவங்கிய அரை மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள், 5.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 883 புள்ளிகள் சரிவைக் கண்டது. அதேபோல் தேசிய பங்குச்
அரை மணி நேரம்,  ரூ.5.27 லட்சம், கோடி, இழப்பு

மும்பை :கொரோனா தொற்று பாதிப்பு, பங்குச் சந்தைகளையும் பதம் பார்த்துவிட்டது. தொற்று அதிகரித்ததை அடுத்து, நேற்று பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.

சந்தை துவங்கிய அரை மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள், 5.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தனர்.வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 883 புள்ளிகள் சரிவைக் கண்டது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 14,400 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது.கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்று, லாபத்தை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இந்த விற்பனையின் காரணமாக சந்தை சரிவைக் கண்டது.நேற்றைய வர்த்தகத்தில், பவர்கிரிட் நிறுவனம் அதிகளவில் சரிவைக் கண்டது. இதையடுத்து, ஓ.என்.ஜி.சி., இண்டஸ்ட் பேங்க், கோட்டக் பேங்க், எல் அண்டு டி., ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டுஉள்ளன.டாக்டர் ரெட்டிஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே, சென்செக்ஸ் பிரிவில் ஏற்றம் பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-202122:41:48 IST Report Abuse
Pugazh V மே. வங்கத்திற்கு பிரதமர் 24 மத்திய மந்திரிகள், நாலு மாநில முதல்வர்கள் , வாரம் ஒருமுறை டூர், தினம் தினம் பரப்புரைக் கூட்டம் என்று கும்மி அடிக்கலாம். கொரோனா பரவாது. தனி விமானங்களில் கொடைக்கானல் போவதால் பரவுகிறது என்று மடத்தனமாக எழுதுகிறார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
20-ஏப்-202104:20:02 IST Report Abuse
blocked user இரண்டாவது அலையில் நாடே ஸ்தம்பிக்கப் போகிறது. எல்லோரும் விடுமுறையில் மூன்று வாரம் வீட்டில் இருந்தால் பரவுவதை கட்டுப்படுத்தலாம். தனி விமானம் மூலம் கொடைக்கானல் சென்றால் நோய் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நினைக்கும் திமுகவினர் இருக்கும் வரை நாடு நாசமாவது உறுதி...
Rate this:
20-ஏப்-202109:51:26 IST Report Abuse
தமிழ் டெல்லியில இருந்து பிளைட்ல போய் பிரச்சாரம் பண்ணாமட்டும் கொரோனா ஓடிப்போய்டுமா....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஏப்-202100:07:01 IST Report Abuse
தல புராணம் பொருளாதாரம் பிச்சிக்கிட்டு போகுது.. பிரச்சினை என்னான்னா பின்னாடி பிச்சிக்கிட்டு போகுது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X