மன்மோகனுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேள்வி

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (24+ 36)
Share
Advertisement
புதுடில்லி:''கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தாங்கள் கூறியுள்ள ஆலோசனைகள், கருத்துகள், உங்கள் கட்சியினருக்கும் தானே,'' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், தடுப்பூசி வழங்குவதை அதிகரிப்பது உட்பட, ஐந்து முக்கிய
 மன்மோகன், அமைச்சர்,  ஹர்ஷ் வர்தன்,  கேள்வி

புதுடில்லி:''கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தாங்கள் கூறியுள்ள ஆலோசனைகள், கருத்துகள், உங்கள் கட்சியினருக்கும் தானே,'' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், தடுப்பூசி வழங்குவதை அதிகரிப்பது உட்பட, ஐந்து முக்கிய ஆலோசனைகளை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
கடிதம் எழுதியுள்ளார்.


சந்தேகம்



இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறிஉள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தடுப்பூசி எடுத்துக் கொள்வதே சிறந்த பாதுகாப்பு என்று நீங்கள் கூறியுள்ளதை ஏற்கிறோம். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு உள்ளது.உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் என பலர், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தினர். மேலும், மோடி அரசு அளிக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் கருத்து கூறியுள்ளனர்.

இதனால், மக்களிடையே, குறிப்பாக காங்., ஆளும் மாநிலத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது.இந்த அசாதாரண சூழ்நிலையில், ஆரோக்கியமான ஒத்துழைப்பு குறித்து நீங்கள் கூறும் இந்த ஆலோசனைகள், உங்கள் கட்சியில் உள்ளவர்களுக்கும் தானே... தடுப்பூசி குறித்து நீங்கள் கூறியதை, உங்கள் கட்சியில் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்றனர். தடுப்பூசி குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர்; அரசை விமர்சிக்கின்றனர்.

நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல், பொய் பிரசாரத்தில் உங்கள் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். நீங்கள் வெளிப்படையாக உங்கள் கட்சியினருக்கு கடிதம் எழுத வேண்டாம்; தனிப்பட்ட முறையிலாவது கூறலாமே. ஆரோக்கியமான ஒத்துழைப்பு அளிப்பது குறித்து பேசும் நீங்கள், உங்கள் கட்சியினரிடம் கூறியிருப்பீர்கள். ஆனால், அது வீண் முயற்சியாகி இருக்கும் என நினைக்கிறேன்.தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது என்பது முக்கியமல்ல.
எத்தனை சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளது என்பதே முக்கியம் என நீங்கள் கூறிஉள்ளீர்கள்.


உத்தரவு



வைரசால் பாதிக்கப்பட்டோர், பலியானோர், சிகிச்சை பெற்று வருவோர் குறித்து மட்டும் ஏன் அப்படி சொல்லவில்லை?இந்தக் கடிதத்தை வரைவு செய்தவர்கள் அல்லது உங்களுக்கு ஆலோசனை வழங்கியவர்கள், உங்களுக்கும் பொய் தகவல்களை கூறியுள்ளனர் என்பது தெரிகிறது.
தடுப்பூசி ஏற்று மதியை நிறுத்த வேண்டும் என நீங்கள் கூறியுள்ளீர்கள். அது தொடர்பான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என்ற உங்களுடைய ஆலோசனை ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு பல பொய்த் தகவல்கள் இருந்தாலும், உங்கள் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்கிறோம். அதுபோன்று இந்த அரசுக்கும், நாட்டின் மீது நல்ல நோக்கம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உங்கள் ஒத்துழைப்பையும், நல்ல ஆலோசனைகளையும் தொடர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அதுபோல, உங்கள் கட்சியினருக்கும், அதை தெரிவிக்கவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
21-ஏப்-202117:02:25 IST Report Abuse
gayathri அரசியல்வாதிகளுக்கு மானம் என்று ஓன்று இருக்கிறதா
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
20-ஏப்-202115:34:46 IST Report Abuse
Jayvee அந்தாளு எங்கப்பா பேசறாரு.. எல்லாம் அந்தம்மா சொல்லி இவர் ஜஸ்ட் கையெழுத்து மட்டும் போடுறாரு .. அவர்கள் ஊழல் போல
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஏப்-202115:16:02 IST Report Abuse
Lion Drsekar பரப்பிரம்மம் என்று கூறுவார்கள் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் இருப்பதுதான் அது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X