பொது செய்தி

தமிழ்நாடு

மே 2 காலை 8:30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவக்கம்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (13+ 30)
Share
Advertisement
சென்னை: ''தமிழகத்தில், மே, 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை, மே, 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு துவங்கும். தபால் ஓட்டு எண்ணிக்கையும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும்
மே 2 காலை 8:30 மணி, ஓட்டு , எண்ணிக்கை

சென்னை: ''தமிழகத்தில், மே, 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை, மே, 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு துவங்கும். தபால் ஓட்டு எண்ணிக்கையும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணியும், ஒரே நேரத்தில் துவங்கும்.


ஓட்டுச்சீட்டு

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், குறைந்தது, 14 மேஜைகளில் இருந்து, 30 மேஜைகள் வரை, ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள இட வசதிக்கேற்ப, எத்தனை மேஜைகளில், ஓட்டுகளை எண்ணுவது என்பதை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முடிவு செய்வர்.ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஏதேனும் ஐந்து ஓட்டுச்சாவடிகளில், வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் அச்சிடப்பட்ட, ஓட்டு சீட்டுகள் எண்ணிப் பார்க்கப்படும்.

தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், இந்தப் பணி நடக்கும்.கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், அந்த தொகுதிக்கு உட்பட்ட, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா, ஐந்து ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச் சீட்டுகள் எண்ணிப் பார்க்கப்படும்.ஓட்டு எண்ணிக்கையின் போது, ஏதேனும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பதிவான ஓட்டுகளை எண்ண முடியாவிட்டால், அந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் தனியாக வைக்கப்படும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் இடையே, ஓட்டு வித்தியாசம், மிகக் குறைவாக இருந்தால், அந்த ஓட்டுச்சாவடியின் வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் பதிவான ஓட்டுச் சீட்டுகள் எண்ணப்படும். ஓட்டு வித்தியாசம் அதிகம் இருந்தால் எண்ணப்படாது.ஓட்டு எண்ணும் இடத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்படும். ஓட்டு எண்ணும் மேஜையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். எனவே, உடனுக்குடன் முடிவுகள், ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியில் வைக்கப்படும் திரையில், நேரடியாக ஒளிபரப்பப்படும்.


ஆன்லைன்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம், அறிக்கை பெறப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எந்த கதிர்வீச்சு அலைகளை பயன்படுத்தியும், எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, இம்முறை அதிகரிக்கப்பட்டு உள்ளதால், வேட்பாளர்களின் எண்ணிக்கை, ஓட்டு எண்ணப்படும் மேஜைகள் எண்ணிக்கைக்கேற்ப, தொகுதிகளின் இறுதி முடிவுகள் வெளியாகும் நேரம் மாறுபடும்.ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, முதன் முதலாக, நேற்று, 'ஆன்லைன்' வழியே, பயிற்சி அளிக்கப்பட்டது; ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


.பாதுகாப்பு உபகரணங்கள்

ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, முக கவசம், கிருமி நாசினி, முகத்தை மறைக்கும், 'ஷீல்டு' மற்றும் கையுறை போன்றவை, தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும். ஓட்டு எண்ணும் அறை முழுதும், கிருமி நாசினி தெளிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (13+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
21-ஏப்-202107:32:48 IST Report Abuse
ocean கையில் இருப்பதை சரிபண்ணி தேர்தலை முடிப்போம். யார் ஜெயித்தாலென்ன. யார் தோற்றாலென்ன.எங்களுக்கு கவலை இல்லை. தேர்தல் ஆணையம் யார் நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-202122:45:45 IST Report Abuse
Pugazh V "கதறுங்கடா" என்று அவமரியாதையாகக் கதறுவதென்னவோ பாஜக வாசகர்கள் தான். பாவம். பாஜக எதாவது இயந்திரம் மாற்றும் தகிடுதத்தம் பண்ண முயன்று கொண்டே இருக்கிறது. புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம் வரை அலர்ட்டாக.இருக்கிறார்கள். இனி எலக்ட்ரானிக் தகிடுதத்தம் பண்ணப் பார்க்கும்.
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
20-ஏப்-202115:10:47 IST Report Abuse
Chandramouli தோல்விக்கான காரணம் இப்போதே கிடைத்து விட்டது . தேர்தல் அன்று என்ன நாடகம் நடக்க போகிறதோ என்று தெரியவில்லை .. முக்கிய நபர்கள் தோல்வி உறுதி . அன்று மக்கள் ஜாக்கிரதையாக வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X