வதந்திகள் குறித்து விளக்கம் அளிக்க டாக்டர்களுக்கு மோடி வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வதந்திகள் குறித்து விளக்கம் அளிக்க டாக்டர்களுக்கு மோடி வேண்டுகோள்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (17)
Share
புதுடில்லி :''கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெரியபடுத்துவதுடன், வைரஸ் பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் கூறப்படும் வதந்திகளுக்கு சரியான விளக்கம் அளித்து தெளிவுபடுத்த வேண்டும்,'' என, டாக்டர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது.
வதந்திகள், விளக்கம்,டாக்டர்கள், வேண்டுகோள்

புதுடில்லி :''கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெரியபடுத்துவதுடன், வைரஸ் பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் கூறப்படும் வதந்திகளுக்கு சரியான விளக்கம் அளித்து தெளிவுபடுத்த வேண்டும்,'' என, டாக்டர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது.


ஆலோசனை



அதை எதிர்கொள்வது குறித்து, பிரபல டாக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் முதல் அலையின் போது, டாக்டர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் சிறப்பான ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பால், நிலைமையை சிறப்பாக கையாண்டோம். தற்போது, இரண்டாவது
அலை தீவிரமடைந்துள்ளது.வைரஸ் பரவல், இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் அதிகம் உள்ளது. அங்குள்ள டாக்டர்களுக்கு நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதை தெரிவிக்க வேண்டும்.முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்று வது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்புடன் கடைப்பிடிப்பதை, டாக்டர்கள் வலியுறுத்த வேண்டும்.தற்போது நமக்குள்ள மிகப் பெரிய ஆயுதம், தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை டாக்டர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில், வைரஸ் பரவல், தடுப்பூசி குறித்தும் உள்ள வதந்திகள், பொய் தகவல்களுக்கு விளக்கம் அளித்து, தெளிவு ஏற்படுத்த வேண்டும்.


'டெலிமெடிசின்'



ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனை வசதிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவசரமில்லாத மற்ற நோய்கள் குறித்து, 'டெலிமெடிசின்' முறையில் சிகிச்சை அளிக்கலாம்.வைரஸ் பரவலைத் தடுக்கவும், தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதற்கும், அரசுக்கு டாக்டர் கள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X