பொது செய்தி

இந்தியா

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (6+ 46)
Share
Advertisement
சென்னை : அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்துசெமஸ்டர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக ஒரு முறை மட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் முறை அமலில் உள்ளது.இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'சாப்ட்வேர்'
புத்தகத்தம், தேர்வு , அனுமதி ,18 வயது, தடுப்பூசி, தகுதி

சென்னை : அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்துசெமஸ்டர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக ஒரு முறை மட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் முறை அமலில் உள்ளது.இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'சாப்ட்வேர்' வழியாக 'ஆன்லைனில்' இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


ஒரு முறை


இந்நிலையில் தன்னாட்சி கல்லுாரிகளாக இயங்கும் அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளுக்கு மட்டும் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கிண்டி இன்ஜி. கல்லுாரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரி, திட்டமிடல் மற்றும் கட்டட அமைப்பியல் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லுாரி ஆகியவற்றின் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.கொரோனா பரவலால் ஒரு முறை சலுகையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையிலான கமிட்டியில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து அண்ணா பல்கலையின் அகாடமிக் இயக்குனரக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசின் அறிவிப்பின்படி இந்த ஆண்டுக்கான டிசம்பர் மற்றும் மே மாத தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.


நுண்ணறிவுத்திறன்இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களில் இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டர் தவிர மற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இதில் 'அ' பிரிவில் தலா இரண்டு மதிப்பெண்கள் வீதம் ஐந்து கேள்விகள் இடம் பெறும். 'ஆ' பிரிவில் தலா எட்டு மதிப்பெண்கள் வீதம் ஐந்து கேள்விகள் இடம் பெறும். இது புத்தகத்தை பார்த்து ஆய்வு செய்து எழுதும் தேர்வு. விடைகளை விளக்கமாக எழுதும் முறை.
இதில் மாணவர்களின் நுண்ணறிவு திறனை தெரிந்து கொள்ளும் வகையில் பகுப்பாய்வு வினாக்கள் அமையும். புத்தகத்தில் இருந்து நேரடியாக விடைகளை எடுத்து எழுதும் வகையில் வினாக்கள் இருக்காது.


90 நிமிடம்மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதும் போது புத்தகம் மற்றும் விளக்க புத்தகங்களை பார்த்துக் கொள்ளலாம்; ஆன்லைனிலும் தேடி எடுக்கலாம். மாறாக குழுவாக அமர்ந்தோ 'வீடியோ' வழியாகவோ பேசி விடைகளை எழுதினால் அது முறைகேடாககணக்கில் எடுக்கப்படும்.தேர்வு முடிந்ததும் அதை தாமதமின்றி 'ஸ்கேன்' செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இந்த தேர்வுக்கு 50 மதிப்பெண்களுக்கு 90 நிமிடம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


இறுதி செமஸ்டர் தேர்வுஅண்ணா பல்கலையின் வளாக கல்லுாரி மாணவர்களில், இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு எழுதுபவர்களுக்கு, சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் அமையும். இது, புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு கிடையாது; ஆன்லைனில் எழுதும் தேர்வாகும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

*********************கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி 18 வயது
மே 1 முதல் நடைமுறைப்படுத்த அரசு உத்தரவுபுதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.


வினியோகம்இதை மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் நம் நாட்டில் தயாரித்து வினியோகம் செய்து வருகிறது.தெலுங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரித்து வினியோகித்து வருகிறது.இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல்கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டன.இரண்டாம் கட்டமாக 60, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.

இந்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது தீவிரமடையத் துவங்கியுள்ளது.இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மூத்த டாக்டர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினர்.அதன் பின் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் தாராளமாகவும், துரிதமாகவும் தடுப்பூசி கிடைக்க வழி செய்யும் வகையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் 50 சதவீத மருந்துகளை மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.


நிர்ணயம்மீதமுள்ள 50 சதவீத தடுப்பு மருந்துகளை மத்திய அரசுக்கு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தடுப்பு மருந்துக்கான விலையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே நிர்ணயம் செய்ய வேண்டும்.
அந்த விலையின் அடிப்படையில் மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகளை தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளும்.இனி மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்.சுகாதாரத்துறை மற்றும் முன்களப் பணியாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச தடுப்பூசி திட்டம் தொடரும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 50 சதவீத தடுப்பூசிகள் மாநிலங்களின் பரவல் நிலவரத்தின் அடிப்படையில் பகிர்ந்து அளிக்கப்படும்.தடுப்பு மருந்தை வீணாக்கும் மாநிலங்களுக்கான வினியோகம் குறைக்கப்படும். இரண்டாவது 'டோஸ்' செலுத்திக் கொள்ள காத்திருப்போருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
20-ஏப்-202113:10:33 IST Report Abuse
Velusamy Ramesh it is called book exam. you can refer books but you can not find answers from there, directly copying is not possible
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
20-ஏப்-202107:52:58 IST Report Abuse
srinivasan Mr.Sivam, there is no if our tem does not punish severely the offers severe punishment is to be ensured. Whether is vaccine or anything
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா
20-ஏப்-202107:02:52 IST Report Abuse
Svs Yaadum oore //..ஆன்லைன் தேர்வு து புத்தகம் மற்றும் விளக்க புத்தகங்களை பார்த்துக் .....//...மருத்துவர் அய்யா சொன்ன மாதிரி நெளிவு சுளிவோடு பாஸ் போட்டு டிகிரி கொடுத்துடுங்க ....இந்த அண்ணா பல்கலை பட்டதாரி ஆவின் பால் பாக்கெட் டெலிவரி , இவர்களுக்கு வேலை திறன் இல்லை என்று சொன்னது சென்னை உயர் நீதி மன்றம் .....நீதிபதி எங்கே படிச்சாரு , வட நாட்டிலா, 10 வது பரிச்சையில் சுவர் மீது பெற்றோர் ஏறி நின்று பிட் கொடுத்தார்களா என்று நீதிபதிகிட்ட கேளுங்க ........இது காஞ்சி தி மு க பெரியவருக்கு புரியனும் ....இங்கே படிக்கிறவனே இந்த பல்கலை பற்றி பெருமையாக ஒன்றும் சொல்வது இல்லை ....பாடமே நடத்துவது இல்லை ....இந்த கிண்டி வளாகம் தன்னாட்சியாம் ....அதனால் அவர்களே பரீட்சை நடத்தி அவர்களே டிகிரி .... இதை கேட்டால் சுந்தர் பிச்சை என்று பதில் ....கைபர் கணவாய் வழியாக வந்தவர் இதுக்கு மட்டும் எப்படி தமிழனாய் மாறினார் ...அண்ணா பல்கலைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ...அவர் படித்தது சென்னை தனியார் பள்ளி .....சமசீர் கிடையாது ....பட்டம் வாங்கியது மேற்கு வங்கத்தில் ....இது புரியாமல் பேசிகிட்டு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X