கணவரை முத்தமிடவா? போலீசிடம் பெண் கேள்வி!

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (8+ 169)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாமல், அநாகரிகமாக பேசிய தம்பதியை, போலீசார் கைது செய்தனர். டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முன்தினம், இந்த உத்தரவை மதிக்காமல், தரியாகஞ் பகுதியில் ஒரு கார் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில், இருந்த தம்பதி, முக கவசம் அணியாமல்
கணவரை முத்தமிடவா?  போலீசிடம் பெண் கேள்வி!

புதுடில்லி : டில்லியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாமல், அநாகரிகமாக பேசிய தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முன்தினம், இந்த உத்தரவை மதிக்காமல், தரியாகஞ் பகுதியில் ஒரு கார் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில், இருந்த தம்பதி, முக கவசம் அணியாமல் இருந்துள்ளனர். ஊரடங்கின்போது, காரில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டும் அவர்களிடம் இல்லை. இந்த விதிமீறல்கள் குறித்து போலீசார் விசாரித்த போது, அபா குப்தா என்ற அந்த பெண், 'என் கணவருக்கு முத்தம் தருவேன்; அதை தடுக்க முடியுமா' என, அநாகரிகமாக பேசி, ரகளை செய்துள்ளார்.

மேலும், அந்த தம்பதி, 'துணிவிருந்தால் கைது செய்து பார்' என, போலீசாருக்கு சவால் விட்டுள்ளனர். இதையடுத்து, பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, அபா குப்தா, அவர் கணவர் பங்கஜ் தத்தா ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (8+ 169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-202123:09:54 IST Report Abuse
Pugazh V இன்னொரு வாசகர் கேரளாவைப் பற்றி ஏனோ எழுதுகிறார். எல்லாமே ஜோக்கரா வந்தா எப்படி ஆடறது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-202123:08:49 IST Report Abuse
Pugazh V ஆஹா.. ஒருத்தர் அந்த கணவர் என்ன இனம் என்று வரை கண்டு பிடித்து பெங்காலி என்று போடுகிறார். கூடவே, அந்த கணவர், நான் மாஸ்க் போட்டிருந்தேன். என் மனைவி தான் வாக்கு வாதம் செய்ய தூண்டி னாள் என்று சொன்னதையும் அவரே தனது கருத்தில் போட்டிருக்கலாம்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-202123:04:40 IST Report Abuse
Pugazh V இங்கே பலரின் கருத்துகள் அந்த அநாகரிக பெண்மணிக்கு ஆதரவாக உள்றதைப் பார்த்து ஆச்சரியம் அடையவில்லை. எதிர்பார்த்தது தான். ஏனெனில் தினமலர் வாசகர்களில் பெரும்பாலும் இந்த கேட்டகரி தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X