கணவரை முத்தமிடவா? போலீசிடம் பெண் கேள்வி!| Dinamalar

கணவரை முத்தமிடவா? போலீசிடம் பெண் கேள்வி!

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (8+ 169)
Share
புதுடில்லி : டில்லியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாமல், அநாகரிகமாக பேசிய தம்பதியை, போலீசார் கைது செய்தனர். டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முன்தினம், இந்த உத்தரவை மதிக்காமல், தரியாகஞ் பகுதியில் ஒரு கார் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில், இருந்த தம்பதி, முக கவசம் அணியாமல்
கணவரை முத்தமிடவா?  போலீசிடம் பெண் கேள்வி!

புதுடில்லி : டில்லியில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாமல், அநாகரிகமாக பேசிய தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முன்தினம், இந்த உத்தரவை மதிக்காமல், தரியாகஞ் பகுதியில் ஒரு கார் வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில், இருந்த தம்பதி, முக கவசம் அணியாமல் இருந்துள்ளனர். ஊரடங்கின்போது, காரில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டும் அவர்களிடம் இல்லை. இந்த விதிமீறல்கள் குறித்து போலீசார் விசாரித்த போது, அபா குப்தா என்ற அந்த பெண், 'என் கணவருக்கு முத்தம் தருவேன்; அதை தடுக்க முடியுமா' என, அநாகரிகமாக பேசி, ரகளை செய்துள்ளார்.

மேலும், அந்த தம்பதி, 'துணிவிருந்தால் கைது செய்து பார்' என, போலீசாருக்கு சவால் விட்டுள்ளனர். இதையடுத்து, பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, அபா குப்தா, அவர் கணவர் பங்கஜ் தத்தா ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X