டில்லியில் அமலானது 6 நாள் முழு ஊரடங்கு

Added : ஏப் 19, 2021
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால், வரும், 26ம் தேதி காலை, 5:00 மணி வரையில், ஆறு நாட்களுக்கான முழு ஊரடங்கு, டில்லியில் அமலுக்கு வந்துள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இங்கு அதிதீவிரமாக உள்ளது. .இந்த நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி : கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால், வரும், 26ம் தேதி காலை, 5:00 மணி வரையில், ஆறு நாட்களுக்கான முழு ஊரடங்கு, டில்லியில் அமலுக்கு வந்துள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இங்கு அதிதீவிரமாக உள்ளது. .இந்த நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:நம் சுகாதார கட்டமைப்பு, இயல்பைவிட அதிகமாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், நிலைமை முழுமையாக மோசமடையவில்லை.தற்போது, மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வேறு வழியில்லாமல், ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆறு நாள் ஊரடங்கின்போது, உரிய வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.வரும், 26ம் தேதி காலை, 5:00 மணி வரையிலான, ஆறு நாள் முழு ஊரடங்கில், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனைத்து கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், சந்தைகள், தியேட்டர், ஓட்டல்கள், பார்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.பொது போக்குவரத்து, கட்டுப்பாட்டுடன் இயக்கப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் வெளியேற வேண்டாம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X