எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி தான் தீர்வு: வதந்திகளை நம்ப வேண்டாம்; டாக்டர்கள் அறிவுரை

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: 'கொரோனா வேகமாக பரவும் சூழலில் தடுப்பூசி மிகவும் அவசியம். தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து பல்துறை மருத்துவ நிபுணர்கள் கருத்து:பயம் வேண்டாம் நிர்மலா, டீன், கோவை அரசு மருத்துவமனை:தடுப்பூசி போட்டுக் கொண்டதால், நடிகர்
கொரோனா, தடுப்பூசி, தீர்வு,  வதந்தி,

கோவை: 'கொரோனா வேகமாக பரவும் சூழலில் தடுப்பூசி மிகவும் அவசியம். தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து பல்துறை மருத்துவ நிபுணர்கள் கருத்து:




பயம் வேண்டாம்


நிர்மலா, டீன், கோவை அரசு மருத்துவமனை:
தடுப்பூசி போட்டுக் கொண்டதால், நடிகர் விவேக் இறக்கவில்லை. அவருக்கு ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பினால், தான் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இவ்வளவு குறைந்த காலத்தில், 'ஆர்ட்டரி' என்று சொல்லக் கூடிய, ரத்தக்குழாயில் பெரிய அளவில், அடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. கொரோனா வேகமாக பரவி வரும், இதுபோன்ற நிலையில் இத்தகைய தவறான கருத்தை மக்கள் மனதில் விதைக்க பார்க்கின்றனர். தேவையற்ற பயம் தவிர்த்து அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.


தயக்கம் காட்டக்கூடாது!


சுரேஷ் வெங்கடாசலம், புற்றுநோயியல் துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை:
கொரோனா வேகமாக பரவி வரும் இச்சூழலில், நமக்கு இருக்கும் ஒரே ஒரு தீர்வு தடுப்பூசி மட்டுமே. அதைப்போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இரு டோஸ்களை முழுமையாக போட்டுக் கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.


தடுப்பூசி நல்ல தீர்வு


பாலமுருகன், இணை பேராசிரியர், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர், கோவை அரசு மருத்துவமனை:
கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும். தவறான கருத்துக்களால், இதுபோன்ற நல்ல விஷயங்கள் தடைபடுகின்றன. இதற்கு முன் ஏராளமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. அதேபோன்று தான் தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதை அனைவரும் போட்டு பயன்பெற வேண்டும்.


இருதய பாதிப்பு இல்லை!


நம்பிராஜன், இருதய நோயியல் துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை:
இருதய பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாரடைப்பு என்பது இருதய ரத்தக் குழாயில் கொழுப்பு அடைப்பின் காரணமாக ஏற்படுவது. இது ஒரு நாளில் ஏற்படக்கூடியது அல்ல. ரத்தம் உறையாமல் இருக்க ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை உட்கொள்பவர்கள் தாராளமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நுரையீரலுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கு மாத்திரை உட்கொள்பவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைக்கு பின் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.


பரவல் சங்கிலி தடுக்கும்


ரவிசங்கர், மருத்துவ அலுவலர், மாவட்ட இடையீட்டு சிகிச்சை மையம், கோவை அரசு மருத்துவமனை:கடந்த, 35 ஆண்டுகளாக பல தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு பல மிகவும் கொடிய நோய்களை உலகளவில் போக்கியுள்ளோம். பரவும் கிருமியை தடுத்து, பரவல் சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டும் என்பதற்காகவே தடுப்பூசி போடப்படுகிறது. அதை கெடுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்புவது தவறு. வதந்திகளை நம்பக்கூடாது. முன்களப்பணியாளர்களான டாக்டர்கள் தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். எந்த டாக்டரோ, நர்ஸோ உயிரிழக்கவில்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.


சர்க்கரை நோயாளிக்கும் தடுப்பூசி



வென்கோஜெயபிரசாத், சர்க்கரை நோயியல் துறைத் தலைவர், கோவை அரசு மருத்துவமனை:சர்க்கரை நோயாளிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வந்தால், வீரியம், பாதிப்பு அதிகம். சாதாரண நோயாளிகளை விட சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா தாக்குதலும் விரைவாக ஏற்படும். அதே போல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் அதிகம். சர்க்கரை நோயாளிகள் அனைவரும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, தடுப்பூசியையும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.


பக்கவிளைவு இல்லை!


பிரபாகரன், சிறுநீரகவியல் துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை:
டயாலிசிஸ் செய்து கொண்டுள்ள நோயாளிகளுக்கு கொரோனா வந்தால் உயிரிழப்பு சதவீதம் அதிகம். உலகளவில், 30 சதவீதம் வரை ஏற்படுகிறது. இதைத்தடுக்க இருக்கும் ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது தான். இதனால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை. பலர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் நலமுடன் உள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.



முற்றிலும் தடுக்கலாம்!


கீர்த்திவாசன், நுரையீரல் நோயியல் துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை:
தடுப்பூசி போடுவதால் தனிப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுதவிர, நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும். ஒரு வேளை கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவாக இருக்கும். இரண்டாவதாக சமூகத்தில் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியும். 50 - 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டால், தொற்று பரவலை முற்றிலும், தடுக்க முடியும். அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-202121:18:31 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசிதான் தீர்வுன்னு நம்பிக்கிட்டிருக்கோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X